6 வகையான பிளாஸ்டிக் உற்பத்திகளிற்கு நாளை முதல் தடை!

Date:

ஆறு வகையான பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உற்பத்தி பொருட்களுக்கு நாளை (31) முதல் உற்பத்தி தடையை விதிக்க சுற்றுச்சூழல் அமைச்சு தீர்மானித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு அந்த அமைச்சு இது தொடர்பில் தெரிவித்துள்ளது.

அதன்படி ஒரு தடவை மாத்திரம் பாவித்து வீசப்படும் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உற்பத்தியான பெட் போத்தலுக்கு (Polyethylene Terepthalate) தடை விதிக்கப்படவுள்ளது.

அதேபோல் 20 மைக்ரோ கிராமுக்கு குறைவான லஞ் சீட், செஷே பெக்கட்ஸ் (உணவு மற்றும் மருந்து அல்லாத) கொட்டன் பட், ( வைத்திய தேவைக்காக பயன்படுத்தப்படாத) மற்றும் காற்று நிரப்பக்கூடிய பிளாஸ்டிக் விளையாட்டு பொருட்களும் தடை செய்யப்படவுள்ளன.

நிறுவனங்கள் பல முன்வைத்த கோரிக்கைக்கு அமைய மேற்படி பொருட்களை நாளை முதல் தடை செய்வதாக சுற்றுச்சூழல் அமைச்சர் நேற்று (29) நடத்திய ஊடகச் சந்திப்பில் தெரிவித்தார்.

தற்போது உற்பத்தி செய்யப்பட்டுள்ள பொருட்களின் விற்பனை கருதி மூன்று மாத காலத்தை சலுகை காலமாக வழங்கவுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இது குறித்த வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

நடிகை அம்பிகா ரூ.46 கோடி காசோலை மோசடி செய்ததாக தங்கை ராதா புகார்

சுமார் ரூ.46 கோடி பணத்தை காசோலை மூலமாக மோசடி செய்ததாக நடிகை...

சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளராக ஜாஹிர் கான் நியமனம்

சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் தலைமை பயிற்சியாளராக இந்திய கிரிக்கெட்...

அனோஜனுக்கு மன்னிப்பு வழங்குமாறு சவூதி மன்னரிடம் தேசிய ஷூரா கவுன்சில் வேண்டுகோள்

இலங்கை தேசிய ஷூரா சபை (NSC), இலங்கை குடிமகனான சிவராசா அனுஜன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்