இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெயில் புற்றுநோய் இரசாயனம் கலந்திருப்பது உறுதி!

Date:

இறக்குமதி செய்யப்பட்ட அனைத்து தேங்காய் எண்ணெய் மாதிரிகளும் தரமற்றவை என இலங்கை தர கட்டளைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் உறுதிபடுத்தியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் மாதிரிகளில் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய அப்லடொக்சின் காசினோஜென் என்ற இரசாயனம் அடங்கியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அவற்றை முழுமையாக நிராகரிப்பதாகவும் இலங்கை தர கட்டளைகள் நிறுவகம் தெரிவித்துள்ளது.

எனவே, தரச்சான்று நிறுவகத்தின் பரிசோதனைகள் நிறைவடையும் வரையில் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் வசமிருந்த தேங்காய் எண்ணெய்யை மீள் ஏற்றுமதி செய்யவும் உரிய சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன் தடை உத்தரவை மீறி எந்தத் தரப்பினரும் இந்த எண்ணெய்யை களஞ்சியப்படுத்தி வைத்திருந்தால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

spot_imgspot_img

More like this
Related

கல்முனை கடற்கரை, பத்ரிய்யாஹ் ஜுமுஆ பள்ளிவாசல்களுக்கு தமிழக அமைச்சர் ஷாஜஹான் விஜயம்

வரலாற்றுச் சிறப்புமிக்க கல்முனை கடற்கரை பள்ளிவாசல் மற்றும் கல்முனை பத்ரிய்யாஹ் ஜுமுஆ...

‘அன்று புலிகளுடன் இணைந்தனர் ஈரோஸ்; இன்று ஈரோசுடன் இணைந்தனர் புலிகள்’: பிரபாகரன் அறிவிப்பு!

ஈரோஸ் அமைப்பின் தலைவர் பாலகுமார் 2500 தோழர்களுடன் சென்று தமிழ் மக்களுக்காக...

மஹிந்த மனைவிக்கு சிங்கப்பூரில் பரிசோதனையாம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிராந்தி ராஜபக்ஷ, நேற்று காலை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்