கல்முனை கடற்கரை, பத்ரிய்யாஹ் ஜுமுஆ பள்ளிவாசல்களுக்கு தமிழக அமைச்சர் ஷாஜஹான் விஜயம்

Date:

வரலாற்றுச் சிறப்புமிக்க கல்முனை கடற்கரை பள்ளிவாசல் மற்றும் கல்முனை பத்ரிய்யாஹ் ஜுமுஆ பள்ளிவாசல் ஆகியவற்றுக்குத் தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜஹான் நேற்று (17) உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார்.

இவ்விஜயத்தின் போது, பள்ளிவாசல்களின் நிருவாகிகளால் தமிழக அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் பள்ளிவாசலின் வரலாற்றுச் சிறப்புகள் குறித்து கேட்டறிந்துகொண்டார்.

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நிசாம் காரியப்பர், கட்சியின் பொருளாளரும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வருமான ரஹ்மத் மன்சூர், முஸ்லிம் காங்கிரஸின் வெளிநாட்டு விவகாரப் பணிப்பாளரும் முன்னாள் முதல்வருமான சிராஷ் மீராசாஹிப் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.

அத்துடன், தமிழகத்திலிருந்து அமைச்சர் ஷாஜஹானுடன் வருகை தந்த சிறப்புத் தூதுக்குழுவினரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

இலங்கை ஊடகவியலாளர் நம்பிக்கை நிதியம்: அரசியல் பிரமுகர்களிடம் திட்ட அறிக்கை கையளிப்பு

இலங்கையின் மூவின ஊடகவியலாளர்களின் நலனைக் கருத்திற்கொண்டு சிலோன் மீடியா போரத்தினால் முன்மொழியப்பட்டுள்ள...

தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு தமிழக அமைச்சர் ஷாஜகான் விஜயம்!

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்குத் தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜஹான் நேற்று...

‘அன்று புலிகளுடன் இணைந்தனர் ஈரோஸ்; இன்று ஈரோசுடன் இணைந்தனர் புலிகள்’: பிரபாகரன் அறிவிப்பு!

ஈரோஸ் அமைப்பின் தலைவர் பாலகுமார் 2500 தோழர்களுடன் சென்று தமிழ் மக்களுக்காக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்