What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
ஹைலெவல் வீதியில் நாவின்ன சந்தியில் எரிவாயு கோரி மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தால் பரபரப்பான நிலைமை ஏற்பட்டது.
எரிவாயுவை வழங்க கோரி காலை முதல் வீதியை மறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில், அந்த பகுதியை சேர்ந்த குழுவொன்று வீதி முற்றுகையை கைவிடுமாறு கூறி, தகராற்றில் ஈடுபட்டது.
இதனால் இரு தரப்பிற்குமிடையில் கைகலப்பு ஏற்பட்டது.
போலீசார் தலையிட்டு, குழப்பம் ஏற்படுத்திய கும்பலை வெளியேற்றினர்.