யாழில் வீடியோ கேமிற்கு அடிமையான இளைஞன் எடுத்த விபரீத முடிவு!

Date:

தொலைபேசி வீடியோ கேமிற்கு அடிமையான 22 வயது இளைஞன், பெற்றோர் கண்டித்ததால் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.

இந்தச் சம்பவம் இளவாலை பொலிஸ் பிரிவில் நேற்று காலை இடம்பெற்றுள்ளது.

​தொலைபேசியில் வீடியோ கேம் விளையாடுவது இளைஞனின் அண்மைக்கால நடவடிக்கையாக இருந்துள்ளது. அதனை குடும்பத்தினர் கண்டித்துள்ளனர்.

நேற்று காலை அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இளைஞனின் சடலத்தில் காதுகளில் மாட்டிய ஹெட்செட் மற்றும் பொக்கெட்டில் அவரது தொலைபேசி என்பன காணப்பட்டுள்ளது.

சடலம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டு உடக்கூற்றுப் பரிசோதனை மற்றும் இறப்பு விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

திடீரென ‘வயதுக்கு வந்த’ பாஸ்கரன்: விலைக்கு வாங்கப்பட்ட அரசியல் கட்சியின் பின்னணி!

சில நாட்களின் முன்னர் இலங்கை தமிழ் அரசு கட்சியும், ஜனநாயக தமிழ்...

புத்தூர் மலையில் 3000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு

ராஜபாளையம் அருகே புத்தூர் மலையில் வெண்சாந்து ஓவியங்கள் மற்றும் கற்கால மனிதர்களின்...

கிளிநொச்சியில் 26 வயது யுவதி கூட்டு வல்லுறவு: 4 காமுகர்கள் கைது!

கிளிநொச்சி, சாந்தபுரம் பகுதியில் யுவதியொருவரை கூட்டு வல்லுறவுக்கு உட்படுத்திய 4 பேர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்