லிட்ரோ எரிவாயு நிறுவனம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை ஏப்ரல் 25 ஆம் திகதி திங்கட்கிழமை வரை இடைநிறுத்தியுள்ளது.
3600 மெட்ரிக் தொன் திரவமாக்கப்பட்ட பெற்றோலிய வாயு கொண்ட கப்பல் ஒன்று திங்கட்கிழமைக்குள் இலங்கையை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 3600 மெட்ரிக் தொன் திரவமாக்கப்பட்ட பெற்றோலிய வாயுவுடன் கூடிய மற்றொரு கப்பலும் புதன்கிழமை (27) நாட்டை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லிட்ரோ நிறுவனத்திடம் தற்போது 1300 மெட்ரிக் தொன் திரவமாக்கப்பட்ட பெற்றோலிய வாயு உள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ஹோட்டல்கள், பாதுகாப்பு சேவைகள், மருத்துவமனைகள் மற்றும் தகனங்கள் போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு தற்போதுள்ள கையிருப்பு வழங்கப்படுகிறது.
இதேவேளை, இலங்கையின் முதன்மை எரிவாயு விநியோகஸ்தர் லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
லிட்ரோவின் தலைவராக ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.
அமைப்புடன் தொடர்புடைய ஊழல் மோசடிகளை மேற்கோள்காட்டி கடந்த வாரம் பதவியில் இருந்து விலகிய தெஷார ஜயசிங்கவுக்குப் பதிலாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.