முல்லைத்தீவில் பயங்கரம்: பெண்ணின் கடி காயங்களிற்கு உள்ளான பொலிஸ்காரர் வைத்தியசாலையில்!

Date:

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இத்திமடு பகுதியில் பெண்ணொருவரினால் கொடூரமாக கடிக்கப்பட்டு, கடி காயங்களுடன் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சட்டவிரோதமாக மரங்கள் அறுக்கப்பட்டு கடத்தப்படுவதாக ஒட்டுசுட்டான் பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று முன்தினம் பொலிசார் சுற்றிவளைப்பொன்றை மேற்கொண்டனர்.

சட்டவிரோதமாக தேக்க மரங்களை அறுத்துக் கொண்டிருந்த குழுவினரே பொலிசாரின் சுற்றிவளைப்பிற்குள்ளாக்கப்பட்டனர்.

இதில் சிலர் தப்பியோடிவிட, ஆணொருவர் கைது செய்யப்பட்டார்.

கைதானவரின் மனைவி பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீது பாய்ந்து, கடித்துக் குதறியுள்ளார். ‘கடி தாக்குதலால்’ பொலிசார் நிலைகுலைந்த சமயத்தில் மரக்கடத்தல் காரனான கணவன் தப்பியோடி விட்டார்.

பொலிசாரை கடித்தது, கடமைக்கு இடையூறு விளைவித்தது, சந்தேகநபர் தப்பியோட உடந்தையாக இருந்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் அந்த பெண் கைதானார்.

spot_imgspot_img

More like this
Related

முச்சக்கர வண்டி கவிழ்ந்து 4 பாடசாலை மாணவர்கள் காயம்!

ஹட்டன் - புளியாவத்தை பிரதான சாலையில், பி.டபிள்யூ. (P.W.) பகுதியில், மாணவர்கள்...

பெண் கொலை: தூக்கில் ஆணின் சடலம்!

புசல்லாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொரகல, பகுதியில் பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்