கோட்டா வீணடித்த பணம்: ஜேவிபி வெளியிட்ட தகவல்!

Date:

அமைச்சரவை அமைச்சுப் பதவிகளை ஏற்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்த அழைப்பை ஜே.வி.பி நிராகரித்துள்ளது.

எந்தவொரு சூழ்நிலையிலும் இடைக்கால, குறுகிய கால அல்லது சர்வகட்சி அரசாங்கக் கட்டமைப்பை உருவாக்குவதற்கு ஜனாதிபதி அல்லது பிரதமருடன் இணைந்து கொள்ள மாட்டார்கள் என்று கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

ஜனாதிபதி முதலில் பதவியில் இருந்து விலக வேண்டும். ஜனாதிபதி மக்களின் கோரிக்கைகளை புரிந்து கொள்ளாத ஒரு தலைவர் என்று கூறிய அவர், தற்போதைய நெருக்கடியானது அமைச்சுப் பதவிகள் தொடர்பான பிரச்சினையல்ல எனவும் தெரிவித்தார்.

இந்த வேளையில் இவ்வாறான பிரேரணையை முன்வைப்பதற்கு ஜனாதிபதிக்கு நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை எனவும் சுட்டிக்காட்டினார்.

‘கோட்டா வீட்டுக்குச் செல்லுங்கள்’ என்ற கோஷத்தை ஜனாதிபதி புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்பட வேண்டும் என்றார்.

அமைச்சரவையை இராஜினாமா செய்ததன் மூலம் அரசாங்கம் நேற்றிரவு ஒரு நாடகத்தை அரங்கேற்றினர். அலி சப்ரியைத் தவிர, தினேஸ் குணவர்தன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் ஜி.எல். பீரிஸ் ஆகியோர் தமது முன்னாள் அமைச்சுப் பதவிகளில் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அத்தகைய நடவடிக்கையின் நோக்கம் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பில் ஜனாதிபதியின் நிலைப்பாடு தொடர்பில் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு இன்று காலை வெளியிட்ட அறிக்கை தொடர்பில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் திஸாநாயக்க, உலகளாவிய நெருக்கடியின் விளைவாக இலங்கையில் நெருக்கடி நிலவுவதாக ஜனாதிபதி தொடர்ந்தும் கூறிவருவதாக  தெரிவித்தார்.

இலங்கை மத்திய வங்கியின் 5.5 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியை ஜனாதிபதி வீணடித்ததாகவும், தனது நண்பர்களின் நிறுவனங்களுக்கு பில்லியன் கணக்கில் இலாபம் ஈட்ட வாய்ப்புகளை வழங்கியதாகவும், இரசாயன உர பாவனையை நிறுத்தியதன் மூலம் விவசாயத் தொழிலை நலிவடையச் செய்ததாகவும் நிதி நிபுணர்கள் தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் திஸாநாயக்க தெரிவித்தார்.

அத்தகைய நடவடிக்கைகள் அனைத்தும் ஜனாதிபதியின் நடவடிக்கைகள் மற்றும் அவரது மோசமான கொள்கை முடிவுகளின் விளைவாகும் என்றும் உலகளாவிய நெருக்கடியிலிருந்து உருவாகவில்லை என்றும் ஜேவிபி தலைவர் கூறினார்.

ஜனாதிபதி தனது சொந்த குறைபாடுகளை புரிந்து கொள்ளத் தவறியுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

திருகோணமலையில் 2 தமிழ் பெண்கள் கடத்தல் விவகாரம்: கடற்படையின் 2 பெண் உத்தியோகத்தர்கள் கைது!

திருகோணமலையில் 2008-ஆம் ஆண்டு சசிகுமார் தென்மொழி மற்றும் மேரி டெல்ஷியா ஆகிய...

மன்னிப்பு வழங்குமாறு அநுரவிடம் கெஞ்சும் ஞானசாரர்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 2019 இல் தனக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி...

னோஜனின் குடும்பத்திற்கு ரிஷாட் பதியுதீன் நேரில் ஆறுதல்: விடுதலைக்காகத் தீவிர முயற்சி

சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கல்முனை, நற்பிட்டிமுனையைச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்