முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகேவின் வீட்டிற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. இதையடுத்து, பொலிசார் கண்ணீர்ப் புகை தாக்குதல் மேற்கொண்டனர்.
தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காணுமாறு கோரி அமைச்சர்கள் பலரது வீடுகளுக்கு முன்பாக இன்று பெருமளவு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காமினி லொக்குகேவின் வீட்டின் முன்பாகவும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது, அவரது வீட்டின் முன்னிருந்த பெரிய விளம்பரப் பலகையையும் தீ வைத்து எரித்தனர்.
இதையடுத்து பொலிசார் கண்ணீர்ப்புகை தாக்குதல் மேற்கொண்டனர்.
முன்னாள் எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகேவின் வீட்டின் முன்னிருந்த விளம்பர பலகை எரிப்பு! #lka pic.twitter.com/84WtwJbPue
— Pagetamil (@Pagetamil) April 4, 2022




