கஞ்சாவுடன் இளைஞன் கைது!

Date:

வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியில் கேரளா கஞ்சாவினை உடமையில் வைத்திருந்த நபர் ஒருவரை வவுனியா பொலிஸார் நேற்று (25) இரவு கைது செய்துள்ளனர்.

குறித்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் நிற்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த பகுதியில் சோதனை நடவடிக்கையினை மேற்கொண்ட பொலிசார், இளைஞர் ஒருவரின் பயண பொதியினை சோதனையிட்டனர்.

இதன்போது பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1600 மில்லிகிராம் எடையுடைய கேரளா கஞ்சாவினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அதனை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் வவுனியா தரணிக்குளம் 38 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

spot_imgspot_img

More like this
Related

காரைதீவு கண்ணகி வித்தியாலய மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு ஸ்மார்போர்ட் வழங்கி வைப்பு

காரைதீவு கண்ணகி இந்து வித்தியாலய மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை மேலும் மேம்படுத்தும்...

நிந்தவூர் பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் இம்ரியாஸுக்கு தேசிய மட்டத்தில் 3 கௌரவங்கள்

நிந்தவூர் பிரதேச செயலகத்தின் பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்   வை....

சாய்ந்தமருது வொலிவேரியன் வீதி சீரமைப்பு -துரித நடவடிக்கை மூலம் வீதியமைக்கும் பணிகள் ஆரம்பம்

சாய்ந்தமருது வொலிவேரியன் பிரதேச மக்களின் நீண்டகாலக் கோரிக்கைக்கு அமைவாக, பாராளுமன்ற உறுப்பினர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்