விபத்தில் ஒருவர் பலி

Date:

திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவிலுள்ள உப்பாற்றில் நேற்றிரவு (30) இடம்பெற்ற வாகன விபத்தில், கிண்ணியா வைத்தியசாலையில் சுகாதார ஊழியராக பணிபுரியும் 42 வயதான யோதிமணி என்பவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

இவர் மூதூர் – கடற்கரைசேனையை சேர்ந்தவர்.

சம்பூரில் இடம்பெற்ற நிகழ்வொன்றுக்கு சென்று மீண்டும் திருகோணமலை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த குறித்த பெண், கிண்ணியா – மட்டக்களப்பு பிரதான வீதியில் உப்பாறு பாலத்துக்கு அருகில் பயணித்துக் கொண்டிருந்த போது, பின்புறமாக வந்த பஸ் அவரை முந்திச்செல்ல முற்பட்டபோது மோட்டார் சைக்கிளில் மோதியதாகவும் இதனையடுத்து சம்பவ இடத்தில் குறித்த பெண் உயிரிழந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பிலான விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

னோஜனின் குடும்பத்திற்கு ரிஷாட் பதியுதீன் நேரில் ஆறுதல்: விடுதலைக்காகத் தீவிர முயற்சி

சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கல்முனை, நற்பிட்டிமுனையைச்...

சஹ்ரானைக் கண்டதுமில்லை-பேசியதுமில்லை-ரிசாட் பதியுதீன்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிமுடன் தனக்கு...

யாழில். இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் , சேந்தான்குளம் பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் சேத்தான்குளம் பகுதியில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்