ஒவ்வொரு சிலிண்டரிலும் 2,000 ரூபா நட்டம்; 3 மாதத்தில் இழுத்து மூடும் நிலைமை வரும்: லிட்ரோ அபாய அறிவிப்பு!

Date:

எரிவாயு சிலிண்டர் ஒன்றிற்கு ரூ.2,000 நஷ்டமடைந்து வருவதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்தும் நட்டத்தில் எரிவாயு விநியோகம் செய்தால் மூன்று மாதங்களில் நிறுவனம் மூடப்படும் எனவும், நாட்டில் எஞ்சியுள்ள ஒரேயொரு எரிவாயு நிறுவனத்தை காப்பாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் விளம்பர முகாமையாளர் பியல் கொலம்பஹெட்டிகே தெரிவித்துள்ளார்.

தற்போது எரிவாயுவை இறக்கும் கப்பலால் லிட்ரோ நிறுவனத்திற்கு 200 மில்லியன் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2021 ஆம் ஆண்டு முதல் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக எரிவாயு வழங்குவதில் ஏற்பட்ட நஷ்டத்தினால் 2021 ஆம் ஆண்டு மாத்திரம் 1100 மில்லியன் ரூபாவை லிட்ரோ இழந்துள்ளதாகவும் இவ்வருடம் இதுவரை 1 பில்லியன் ரூபாவை இழந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

கொழும்பில் உள்ள லிட்ரோ தலைமையகத்தில் இன்று (18) பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

40 ஆண்டுகளின் பின் ஈரானுக்குள் அமைதியாக நடக்கும் அதிகார மாற்றம்: மதகுருமாரை பின்தள்ளி ஆதிக்கம் செலுத்தும் இராணுவம்!

த நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையின் ஒரு விரிவான அறிக்கையின்படி, ஈரானின் முடிவெடுக்கும்...

அம்பியூலன்ஸ் மெதுவாக சென்றதால் பொலிஸ்காரர் உயிரிழப்பா?: பௌத்த பிக்கு குற்றச்சாட்டு

திருகோணமலை மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் இருந்து திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு ஏற்றிச்...

ஈரானுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்தமாட்டோம்: ட்ரம்ப்

ஈரானுக்கு எதிரான போரில் அணு ஆயுதத்தைப் பயன்படுத்த மாட்டேன் என்று அமெரிக்க...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்