10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை 103 வயது ஆசிரியருக்கு 15 வருட சிறைத்தண்டனை!

Date:

10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 103 வயதுடைய ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியருக்கு 15 ஆண்டு சிறைத்தண்டனை  விதித்து திருவள்ளூர் மகளிர் நீதிமனறம் தீர்ப்பு அளித்தது.

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பத்தை சேர்ந்தவர் பரசுராமன் (வயது 103). ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர். இவரது வீட்டில் 5ஆம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமி தனது பெற்றோருடன் வாடகைக்கு தங்கி இருந்தார். அந்த சிறுமியை 2018ஆம் ஆண்டு பரசுராமன் சாக்லெட் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்தார்.

இதுகுறித்து அந்த சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் ஆவடி மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பரசுராமனை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். மேலும் அவர் மீது போக்சோ சட்டமும் பாய்ந்தது.

இந்த வழக்கு திருவள்ளூரில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கு விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

ஆவடி அனைத்து மகளிர் போலீசார் பரசுராமனை திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிபதி சுபத்ரா தேவி, குற்றம் நிரூபிக்கப்பட்டதால் பரசுராமனுக்கு 15 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.45 ஆயிரம் இழப்பீடு அளிக்கவும் உத்தரவிட்டார்.

spot_imgspot_img

More like this
Related

பெருமளவு போதைப்பொருளுடன் அழகுநிலைய ஜோடி கைது!

மாத்தறையில் அழகு நிலையம் நடத்தி வரும் தம்பதியினர், சுமார் 7 கோடி...

நேபாள பெருவெள்ளம்: இதுவரை 359 பேர் உயிரிழப்பு; 800+ பேரை தேடும் பணி தீவிரம்

நேபாள வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு...

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய இரதோற்சவம் கோலாகலம்!

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய இரதோற்சவம் கோலாகலம்! வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்