அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்த வேண்டாமெனக் கோரி, ஜே.வி.பியின் தலைவரும் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க உயர்நீதிமன்றத்தில் ரிட் மனுவை இன்று (24) தாக்கல் செய்தார்.
தனக்கு எதிராக ஆணைக்குழு அளித்த பரிந்துரைகளை செயல்படுத்துவதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவு மற்றும் தொடர்புடைய பரிந்துரைகளை ரத்து செய்ய உத்தரவு பிறப்பிக்குமாறு அநுரகுமார திஸாநாயக்க கோரியுள்ளார்.
அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் உபாலி அபேரத்ன, அதன் உறுப்பினர்கள் சந்திர பெர்னாண்டோ, சந்திர ஜெயதிலக மற்றும் லஞ்ச ஆணைக்குழுவின் பணிப்பாளர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1