Pagetamil
குற்றம்

சிறையிலிருந்த போது மனைவிக்கு கள்ளக்காதல்; விடுதலையானதும் கை, கால்களை வெட்டிய கொடூரம்: சுட்டுக்கொல்லப்பட்ட ரௌடியின் ‘பகீர்’ பின்னணி!

ஹொரணை, கந்தானை பிரதேசத்தில் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டு, தனது குழந்தையை கடத்திச் சென்ற பாதாள உலகக்குழு உறுப்பினர் பொலிசாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளார்.

பொலிசாரால் தேடப்பட்டு வந்த நீலக சந்தருவன் (24) நேற்று ஹொரணை, பலபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டின் போது பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

அங்குருவதொட்ட, பலபிட்டிய, பிடிகொல சந்தி பகுதியில் இரண்டு மாடி வீட்டில் குழந்தை உள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் அங்குருவதொட்ட பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் அங்கு சென்றுள்ளனர். இதன் மூலம் முகாமின் உதவியும் பெறப்பட்டதாக கூறப்பட்டது.

விசேட அதிரடிப்படையினர் வீட்டைச் சுற்றி வளைத்தபோது ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் நீலக கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அப்போது சந்தேகநபரின் ஏழு வயது குழந்தை அங்கு இருக்கவில்லை.

பொலிசார் நடத்திய விசாரணையில், குழந்தையை பார்த்துக் கொள்ளுமாறு நண்பரிடம் கூறிவிட்டு நீலக நேற்று தலைமறைவாகியது தெரியவந்தது.

குழந்தை ஹொரண பொலிஸ் தலைமையகத்தில் ஒப்படைக்கப்பட்டு பின்னர் பாட்டியிடம் ஒப்படைக்கப்பட்டது.

போதைப்பொருளுக்கு அடிமையாகிய நீலக மீது கொலை, பாலியல் வல்லுறவு, சித்திரவதை குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

நீலக கடந்த 11ஆம் திகதி தனது மனைவியின் கை, கால்களை வெட்டியதுடன், தலையிலும் பலத்த காயம் ஏற்படுத்தியுள்ளார். மனைவி தொடர்ந்தும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

சில வருடங்களுக்கு முன்னர் ஹொரணை, கிரிகலஹேன பிரதேசத்தில் சித்திரவதை கூடம் ஒன்றை நடத்தி பலரை கடத்திச் சென்ற சித்திரவதை செய்து பொதுமக்களை அச்சுறுத்திய குற்றச்சாட்டின் பேரில் நீலக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ருந்தார்.

அவர் விளக்கமறியலில் இருந்த காலப்பகுதியில், அவரது மனைவிக்கு முச்சக்கர வண்டி சாரதியொருவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

விளக்கமறியலில் இருந்து விடுவிக்கப்பட்டதும், இந்த உறவு குறித்து, தம்பதியரிடையே  மோதல் ஏற்பட்டது.

நீலகவின் மனைவியின் கள்ளக்காதலனும்,  புளத்சிங்கள ஹல்வத்துர பிரதேசத்தில்  வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளார்.

இதன்பின்னரே, கடந்த வாரம் மனைவியின் கை, கால்களை வெட்டியுள்ளார்.

நீலக்கான் படுகொலையை அடுத்து நேற்று ஹொரணை பிரதேசத்தில் பட்டாசுகள் கொளுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மாணவியை துஷ்பிரயோகதிற்கு உட்படுத்தியோர் கைது

east tamil

திருடிய பெண்ணை காட்டிக்கொடுத்த கிளி

east tamil

சுடலையில் மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்கள் மீட்பு

east tamil

பேஸ்புக்கில் அறிமுகமாக அழகான யுவதியை சந்திக்க ஹோட்டலுக்கு சென்ற தொழிலதிபர்; அனைத்தையும் உருவிக் கொண்டு எஸ்கேப் ஆன யுவதி!

Pagetamil

கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் ஐஸ்போதைப்பொருளுடன் கைது

east tamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!