வவுனியாவில் மக்கள் குறைகளை கேட்டறிந்த ஜனாதிபதி!

Date:

வவுனியாவிற்கு விஜயம் செய்த ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ மக்கள் குறைகேள் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

இன்று (11) காலை 10 மணிக்கு வவுனியா பல்கலைக் கழகத்தின் விடுதியில் அமைந்துள்ள மைதானத்தில் விசேட உலகுவானூர்தியில் வந்திறங்கிய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அவர்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், கு.திலீபன், மற்றும் பொபதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர் ஜனக நந்தகுமார ஆகியோர் ஜனாதிபதியை வரவேற்றிருந்தனர்.

இதனையடுத்து மைதானப் பகுதிக்கு வருகை தந்திருந்த மக்களிடம் காணிப்பிரச்சனை, விவசாயப் பிரச்சனை மற்றும் அவர்களது தேவைகள், கோரிக்கைகள் தொடர்பாகவும் ஜனாதிபதி கேட்டறிந்து கொண்டார். இதன்போது மக்களது பிரச்சனைகள் தொடர்பில் அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகளுடனும் ஜனாதிபதி கலந்துரையாடி இருந்தார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இன்று ஈரானை தாக்கவிருந்தபோதும் அயல் நாடுகளின் கோரிக்கையால் கைவிட்டுள்ளோம்: ட்ரம்ப்

சவூதி அரேபியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின்...

அம்பாறையில் ஒருவர் சுட்டுப்பிடிப்பு

காவல்துறை காவலில் இருந்து தப்பிச் சென்ற சந்தேக நபர் ஒருவர், நேற்று...

டித்வா அனர்த்தத்தில் மண்ணுக்குள் புதைந்த முச்சக்கர வண்டி 171 நாட்களின் பின் மீட்பு

டித்வா புயலால் உவபரநாகமவில் உள்ள மஸ்பன்ன என்ற சிறிய ஊருக்கு அருகே...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்