பதுளை பொது வைத்தியசாலையின் 20 வைத்தியர்கள் மற்றும் 60 பணியாளர்கள் கோவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள ஒன்பது மருத்துவர்களில் ஆறு பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இருப்பினும், அனைவரும் தடுப்பூசி செலுத்தியுள்ளதால் யாரும் ஆபத்தான நிலையில் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.



