பிக் பாஸ் சீசன் 5 வெற்றியாளராக ராஜு ஜெயமோகன் தேர்வு

Date:

பிக் பாஸ் சீசன் 5 வெற்றியாளராக ராஜு ஜெயமோகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

விஜய் தொலைகாட்சியில் ஆண்டுதோறும் ஒளிபரப்பாகிவரும் நிகழ்ச்சி ‘பிக் பாஸ்’. 2017ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியை கடந்த ஐந்து ஆண்டுகளாக கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் கடந்த ஓக்டோபர் மாதம் தொடங்கியது. இதில் ராஜு ஜெயமோகன், இமான் அண்ணாச்சி, பிரியங்கா, தாமரை செல்வி, அக்‌ஷரா, நிரூப், சிபி சந்திரன், வருண் உள்ளிட்டோர் போட்டியாளர்களாக பங்கேற்றனர். அமீர், சஞ்சீவ் உள்ளிட்டோர் வைல்ட் கார்டு என்ட்ரியாக பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றனர். இவர்களில் ராஜு, பிரியங்கா, பாவ்னி, அமீர், நிரூப் ஆகிய ஐந்து பேரும் இறுதி போட்டியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்நிலையில் கடந்த 105 நாட்களாக நடைபெற்று வந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தற்போது நிறைவடைந்தது. இதில் ராஜு ஜெயமோகன் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பிரியங்கா ரன்னராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார். ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் ராஜுவுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ராஜு ஜெயமோகன் 2017ஆம் ஆண்டு வெளியான ‘நட்புன்னா என்னன்னு தெரியுமா?’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதற்கு முன்பாகவே ‘கனா காணும் காலங்கள்’, ‘ஆண்டாள் அழகர்’ உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் நடித்திருந்தார்.

spot_imgspot_img

More like this
Related

ராஜ் சோமதேவ அறிக்கை தாமதம்! செம்மணி புதைபுழி வழக்கு ஒத்திவைப்பு

செம்மணி புதைகுழி தொடர்பான வழக்கு இன்று யாழ் மேலதிக நீதவான் லெனின்குமார்...

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சிறப்பாக நடைபெற்ற “கால் நூற்றாண்டு கால இஸ்லாமியத் தமிழ்ச் சிறுகதைக் களஞ்சியம்” நூல் வெளியீடு

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக கலைக்கூட அரங்கில் “கால் நூற்றாண்டு கால இஸ்லாமியத்...

சவுதியில் கைதாகியுள்ள அனோஜனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய முக்கிய பிரதிநிதிகள்

சவுதி அரேபியாவில் தண்டனைக்கு உள்ளாகியுள்ள சிவராசா அனோஜன் என்பவரின் குடும்பத்தினரை முக்கிய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்