தேசிய கல்வியியற் கல்லூரிகளை சனிக்கிழமை முதல் திறக்குமாறு கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
நாட்டில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தேசிய கல்வியியல் கல்லூரிகள் சில வாரங்களாக மூடப்பட்டுள்ளன.
இதேவேளை, தற்போது தகவல் தொழில்நுட்ப கற்கைநெறிகளை பின்பற்றும் உயர்தர மாணவர்களை உள்வாங்குவதற்காக புதிய ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளை நிறுவுவதற்கு கல்வி அமைச்சர் குணவர்தன பணிப்புரை விடுத்துள்ளார்.



