திருகோணமலை கந்தளாய் குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
கடந்த சில நாட்களாக நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக கந்தளாய் குளத்தின் நீர் மட்டம் அதிகரித்துள்ள நிலையில் நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
கந்தளாய் குளத்தின் நான்கு வான் கதவுகள் ஒரு அடிக்கு திறக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் நீர்ப்பாசனப் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்
தற்போது கந்தளாய் நீர்த்தேக்கத்தில் சுமார் 107,000 அடிகள் நீர் தேங்கி உள்ளதாகவும் இவ்வாறு திறக்கப்பட்ட வான் கதவுகளினூடாக வினாடிக்கு 450 கன அடி வீதம் நீர் வெளியேற்றப்படுவதாகவும் தெரிவித்தார்.
–ரவ்பீக் பாயிஸ் –




