சுசில் பதவிநீக்க செய்தியினால் வருத்தமடைந்தேன்: அமைச்சர் டலஸ்!

Date:

இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து சுசில் பிரேமஜயந்த நீக்கப்பட்ட செய்தியை அறிந்து தாம் வருத்தமடைவதாக அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பினால் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக ஜனாதிபதிக்கு இவ்வாறான தீர்மானங்களை எடுக்க உரிமை உண்டு எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (4) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

சுசில் பிரேமஜயந்தவின் பதவி நீக்கம் அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானங்களை விமர்சித்ததாலா என ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினார்.

தனது நண்பர் சுசில் பிரேமஜயந்தவிற்கு எதிராக எடுக்கப்பட்ட தீர்மானத்தை அறிந்து தாம் உடனடியாக வருத்தமடைந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

கட்சிக்குள் அல்லது அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்ட தீர்மானம் அல்ல என்பதனால் இதற்கான காரணம் தெரியவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

விடுதியில் இளம்பெண் கொலை: காதலன் தலைமறைவு

நுவரெலியாவின் மகாஸ்தோட்டப் பகுதியில் உள்ள தங்குமிடம் (cabana) ஒன்றில் இளம் பெண்...

தீபாவளியன்று விபத்தில் சிக்கிய மனோ கணேசன்: மதுபோதையில் வாகனம் செலுத்தியதாக வழக்கு!

நவம்பர் 8 ஆம் திகதி தீபாவளித் திருநாளின் இரவு, நாடாளுமன்ற உறுப்பினரும்...

ஹிருணிகாவின் மேல்முறையீடு: நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு!

2015-ஆம் ஆண்டு இடம்பெற்ற கடத்தல் சம்பவம் தொடர்பான வழக்கில், முன்னாள் நாடாளுமன்ற...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்