ஐஸ்கிரீம் கடைக்குள் ஆடையை கழற்றி முகக்கவசமாக அணிந்த யுவதி (VIDEO)

Date:

அர்ஜென்டினாவில் ஐஸ்க்ரீம் கடையொன்றிற்குள் முகக்கவசம் இல்லாமல் நுழைந்த இளம்பெண்ணொருவர், திடீரென தனது ஆடையை கழற்றி முகக்கவசமாக அணிந்த சுவாரஸ்ய சம்பவம் நடந்தது.

இந்த சம்பவம் ஜனவரி 1 ஆம் திகதி இரவு 10.40 மணியளவில் மேற்கு அர்ஜென்டினாவின் மென்டோசா மாகாணத்தில் உள்ள Godoy Cruz நகரில் இடம்பெற்றது. வர்த்தக நிலையத்தின் சிசிரிவி கமராவில் பதிவான காட்சிகள் வௌியாகி வைராலாகி வருகின்றன.

ஆர்ஜென்னொவில் வர்த்தக நிலையங்களில் முகக்கவசம் அணிந்தவர்கள் மாத்தரமே பொருள்களை வாங்கலாம்.

ஐஸ்கிரீம் கடையொன்றிற்கு தந்தையும், 3 மகள்களும் நுழைந்து, கவுண்டரை அணுகும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

தந்தை மூக்கின் கீழ் முகமூடியை அணிந்திருந்தாலும், அவர் ஓர்டர் செய்ய அனுமதிக்கப்படுகிறார்.

அப்போது, 11 பேர் கொண்ட இளம் ஆண், பெண்களை கொண்ட நண்பர்கள் குழு அந்த வர்த்தக நிலையத்திற்கு வந்தது. அவர்களில் யாரும் முகக்கவசம் அணிந்திருக்கவில்லை.

அந்த குழுவிலிருந்த ஒரு யுவதி ஐஸ்கிறீம் கடைக்குள் நுழைந்தபோது, முகக்கவசம் அணிய வேண்டுமென ஊழியர்கள் தெரிவித்தள்ளனர்.

‘அதைப்பற்றி கவலைப்படாதீர்கள். நான் அணிந்து கொள்கிறேன்’ என அந்த யுவதி கூறி, யாரைப்பற்றியும் அக்கறைப்படாமல் தனது ஆடைய கழற்றி முகக்கவசமாக அணிகிறார்.

எனினும், அவருக்கு ஐஸ்கிறீம் வழங்க முடியாதென கூறியதையடுத்து, அவர் வெளியேறினார்.

பின்னர், அவர்கள் முகக்கவசம் வாங்கி அணிந்தபடி, ஐஸ்கிறீம் கடைக்குள் நுழைந்தனர்.

spot_imgspot_img

More like this
Related

விடுதியில் இளம்பெண் கொலை: காதலன் தலைமறைவு

நுவரெலியாவின் மகாஸ்தோட்டப் பகுதியில் உள்ள தங்குமிடம் (cabana) ஒன்றில் இளம் பெண்...

தீபாவளியன்று விபத்தில் சிக்கிய மனோ கணேசன்: மதுபோதையில் வாகனம் செலுத்தியதாக வழக்கு!

நவம்பர் 8 ஆம் திகதி தீபாவளித் திருநாளின் இரவு, நாடாளுமன்ற உறுப்பினரும்...

ஹிருணிகாவின் மேல்முறையீடு: நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு!

2015-ஆம் ஆண்டு இடம்பெற்ற கடத்தல் சம்பவம் தொடர்பான வழக்கில், முன்னாள் நாடாளுமன்ற...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்