அவுஸ்திரேலியாவில் நீரில் மூழ்கி உயிரிழந்த யாழ் இளைஞன்!

Date:

அவுஸ்திரேலியாவில் தமிழ் இளைஞர் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

விக்டோரியாவின் தென்மேற்கில் உள்ள ஜீலாங் கடற்கரையில் அவர் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தார். நண்பர்களுடன் விடுமுறையை கழிக்க சென்ற போது இந்த அனர்த்தம் நிகழ்ந்தது.

யாழ்ப்பாணம் சாவகச்சேரியை சொந்த இடமாக கொண்ட, செல்வராசா சிறிபிரகாஸ் (29) என்பவரே உயிரிழ்தார். அவர் தற்போது மெல்பர்ன், எப்பிங் பகுதியில் வசித்து வருகிறார்.

அதிகாலை 4.35 மணியளவில் ரிச்சி பவுல்வர்டு கடற்கரையில் அவர் அலையில் அடித்து செல்லப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, மீட்புக்குழுக்கள் தேடுதலை மேற்கொண்டனர்.

மாலை வேளையில், ஜீலாங்கில் உள்ள கிழக்கு கடற்கரையின் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

யாழ்ப்பாணத்தில் களவு குற்றச்சாட்டு – நான்கு சந்தேகநபர்கள் மாவட்ட குற்றதடுப்பு பிரிவால் கைது!

யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸாரால் களவு குற்றச்சாட்டில் நான்கு சந்தேகநபர்கள்...

தேசிய உற்பத்தி திறன் போட்டியில் தேசிய அளவில் முதலிடம் பிடித்த கிளிநொச்சி அம்பாள்குளம் விவேகானந்தா வித்தியாலயம்!

2025/2026 ஆம் ஆண்டுக்கான தேசிய உற்பத்தி திறன் போட்டியில், கிளிநொச்சி அம்பாள்குளம் விவேகானந்தா...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்