நயினாதீவில் மினி சூறாவளி!

Date:

யாழ்ப்பாணம் – நயினாதீவு வடக்கு பகுதியில் நேற்று மாலை வீசிய மினி சூறாவளி தாக்கத்தினால் ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 14 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் நேற்று காலையிலிருந்து மழையுடன் கூடிய காலநிலை நிலவுகின்ற நிலையில், மாலை வேலணை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட நயினாதீவு வடக்கு ஜே 35 கிராம சேவகர் பிரிவில் வீசியமினி சூறாவளியின் தாக்கத்தினால் ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மூன்று வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சேத விபரங்கள் தொடர்பில் குறித்த பிரதேச செயலகத்தினூடாக விவரங்கள் சேகரிக்கப்பட்டு கொழும்பு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

மனைவியுடன் சண்டையிட்டு விபரீத முடிவெடுக்கும் இலங்கை ஆண்களுக்கு எச்சரிக்கை சம்பவம்!

மனைவியுடனான குடும்பத் தகராறு காரணமாக கம்புருபிட்டிய பகுதியில் உயர் அழுத்த மின்...

பொன்சேகா மீதான தற்கொலை தாக்குதல்: 17 வருடங்களின் பின் சந்தேகநபர்களுக்கு பிணை!

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை படுகொலை செய்யும் நோக்கத்தில், விடுதலைப்...

சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு – பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர் அறிவிப்பு

சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக பிரேசில் அணியின் நட்சத்திர வீரர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்