மிரட்டிய பாதாள உலகக்குழு தலைவனின் உடல் இலங்கைக்கு வந்தது!

Date:

டுபாயில் உயிரிழந்த பாதாள உலகக்குழு தலைவன் கெசல்வத்தை தினுக என்பவரின் சடலம் இன்று  கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.

மாக்கந்துரே மதுஷிற்கு பின்னர் அந்த வலையமைப்பை வழிநடத்திய தினுக, இலங்கையில் தேடப்பட்டு வரும் ஒருவர்.

டுபாயில் அவர் கடந்த 14ஆம் திகதி உயிரிழந்தார்.

அவர் மாரடைப்பால் உயிரிழந்து தரையில் கிடந்த புகைப்படங்கள் வெளியாகியிருந்தன.  பிரேத பரிசோதனையில் அவர் அதிகப்படியான போதைப்பொருள் பாவனையால் மாரடைப்பால் இறந்தது தெரிய வந்தது.

இன்று (18) காலை 10.47 மணியளவில் டுபாயில் இருந்து மாலைதீவு வழியாக யுஎல் 232 இலக்க விமானத்தில்,  கசுன் மதுரங்க ராஜபக்ஷ என்ற பெயரில் சடலம் கொண்டு வரப்பட்டது.

உடல் கெசல்வத்தை தினுகவினதா என்பதை உறுதிப்படுத்த டி.என்.ஏ சோதனைகள் நடத்தப்படவுள்ளது.

06.10.1986 அன்று பிறந்த ராஜபக்ஷ ஆராச்சி தினுக மதுஷன் அல்லது கெசல்வத்தை தினுக, தனது தேசிய அடையாள அட்டை எண் 862800788 வி ஐப் பயன்படுத்தி 2005 ஆம் ஆண்டில் தனது பாஸ்போர்ட் N1453535 ஐப் பயன்படுத்தி வெளிநாடு சென்றதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவரது தாயார் ரேணுகா அமரசீலி அவரது உடலை அடையாளம் காண இன்று கட்டுநாயக்க வந்தார்.

பொலிஸ் தகவல்களின்படி, கெசல்வட்த்தையில் உள்ள தினுகவின் மனைவியின் பெயர் சுமாலி பாக்யா திலகரத்ன.

மருதானையில் ஒருவரை கடத்தி கொலை செய்தது, கொழும்பு 12 இல் கொலை, கித்சிரி ராஜபக்ஷ கொலை மற்றும் கோட்டஹேனாவில் லெவ்கே பண்டார மிலனை சுட்டுக் கொன்றது போன்ற குற்றச்சாட்டுகள் தினுக மீது சுமத்தப்பட்டுள்ளன.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஒரு சில கொடுங்கோலர்களால் உலகம் நாசமாகிறது: ட்ரம்பை மறைமுகமாக சாடிய போப்!

போர்களுக்காக பில்லியன் கணக்கில் செலவழிக்கும் தலைவர்களை போப் கடுமையாகச் சாடியதோடு, "ஒரு...

விவசாயி சின்னத்தை நாதக பயன்படுத்த தடை கோரிய வழக்கு தள்ளுபடி

ஜனதா கட்சியின் ‘ஏர் உழவன்’ சின்னத்தைப் போல இருக்கும் விவசாயி சின்னத்தை...

ஆயுதங்களுடன் சிக்கிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரியாராச்சி வசம் ஆயுதங்கள் இருப்பதாக கொழும்பு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்