அழகிகளிற்கு கொரோனா: உலக அழகிப் போட்டி பிற்போடப்பட்டது!

Date:

2021ஆம் ஆண்டுக்கான உலக அழகி இறுதிப் போட்டி அமெரிக்காவின் போர்ட்டோ ரிக்கோவில் நடைபெற இருந்தது. இந்நிலையில், இந்திய அழகி மானசா வாரணாசி உட்பட 16 அழகிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, போட்டி தள்ளிவைக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து போட்டியில் பங்கேற்ற பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அழகிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இறுதிப் போட்டி மீண்டும் அடுத்த 90 நாட்களுக்குள், போர்ட்டோ ரிக்கோவின் வேறு பகுதியில் நடத்த திட்டமிடப்படும் என்று உலக அழகிப் போட்டிக்கான அமைப்பு தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து உலக அழகிப் போட்டிக்கான அமைப்பு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறும்போது, ‘இன்று காலை பல்வேறு அழகிகளுக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டதையடுத்து சுகாதார அதிகாரிகள் மற்றும் நிபுணர்களுடன் கலந்தாலோசித்த பிறகு இறுதிப் போட்டியை தள்ளி வைக்க முடிவு எடுக்கப்பட்டது’ என்று தெரிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

அனோஜனை காப்பாற்றிய சட்ட நுணுக்கங்கள்!

சவூதி அரேபியாவின் உச்ச நீதிமன்றம், இலங்கை புலம்பெயர் தொழிலாளியான அனோஜன் சிவராசாவுக்கு...

இலங்கையில் ஆறரை வருடத்தில் 5வது முறையாக நாடளாவிய மின்வெட்டு

இலங்கையில் நேற்று, 2020 பெப்ரவரி மாதத்திற்குப் பிறகு ஐந்தாவது முறையாக நாடு...

தடைசெய்யப்பட்ட அதிவேக மோட்டார் சைக்கிள்கள் யாழில் பறிமுதல்

இலங்கையில் தடை செய்யப்பட்ட அதிக வேகத்திறன் (சி.சி) கொண்ட 5 மோட்டார்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்