பதற வைக்கும் பழிவாங்கும் படலம்: இளைஞனின் காலை வெட்டியெடுத்து சென்று நடுவீதியில் வைத்து கொண்டாட்டம்!

Date:

கேரள மாநிலத்தின், திருவனந்தபுரம், போத்தன்கோடு பகுதியில் குண்டர் கும்பலால் இளைஞன் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். இளைஞரை விரட்டிச் சென்று, குடும்பத்தினர் முன்பாக சரமாரியாக வெட்டியதுடன், அவரது காலை துண்டித்து எடுத்து சென்றனர்.

பின்னர் நடுவீதியில் வெட்டிய காலை வைத்து வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த கொடூர சம்பவம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் 2.45 அளவில் நடந்தது.

போத்தன்காடு, கல்லூர் பகுதியில் மங்களபுரம், செம்பகமங்கலம், லட்சம்வீடு காலனியை சேர்ந்த சத்யன் சுதீஷ் (32) என்பவரே வெட்டிக் கொல்லப்பட்டார்.

கொலை முயற்சி உள்ளிட்ட பல வழக்குகளில் சுதீஷ் தேடப்பட்டு வந்தவர். இந்த நிலையிலேயே கொல்லப்பட்டுள்ளார்.

நேற்று மதியம் 2.45 மணியளவில் மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டியில் 12 பேர் கொண்ட கொலையாளிகள் அங்கு வந்தனர். கல்லூர் அருகே உள்ள பனை வயலில் சுதீஷை அந்த கும்பல் வழிமறித்துள்ளனர். உயிருக்கு பயந்து அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு ஓடிய சுதீஷை அவர்கள் விரட்டிச் சென்றனர்.

அந்த வீட்டின் மீது வெடிகுண்டை வீசினர். வீட்டு கதவு, யன்னல்களை அடித்துடைத்து, வீட்டிலிருந்த சிசுவையும் தாக்கியுள்ளனர்.

அந்த குழந்தையின் முன்பாகவே சுதீஷை கண்டதுண்டமாக வெட்டினர். சுதீஷின் காலொன்றை தொடையுடன் வெட்டியெடுத்துக் கொண்டு அந்த கும்பல் புறப்பட்டது.

கல்லூர் கால்நடை மருத்துவமனை சந்தியில், அந்த காலை வைத்து வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், குற்றம் நடந்த இடத்தில் இருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் நடுவீதியில் காலை வீசி விட்டு சென்றனர்.

இந்த கொண்டாட்டத்தின் சிசிடிவி காட்சிகளை போலீசார் சேகரித்துள்ளனர்.

குண்டர் தலைவரின் நண்பரை கொன்றதற்கு பழிவாங்கும் நோக்கில் இந்த கொலை நடத்தப்பட்டது தெரியவந்துள்ளது. சுயநினைவை இழப்பதற்கு முன், தன்னை வெட்டிய பிரபல குண்டர் ஒட்டகம் ராஜேஷ் மற்றும் அழூர் உன்னி ஆகியோரின் பெயர்களை சுதீஷ் காவல்துறையிடம் தெரிவித்தார். சுதீஷ் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இந்த தகல்களை போலீசாரிடம் கூறியுள்ளார். சுதீஷ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிறிது நேரத்தில் இறந்தார்.

கொலையாளிகள் பயணித்த ஆட்டோ டிரைவர் ரஞ்சித்தை போலீசார் கைது செய்தனர். கொலையாளிகளுக்கு உதவிய மேலும் மூவரை விசாரணைக் குழு கைது செய்துள்ளது.

இந்த கும்பல், கொலைக்கு முன்பாக ஒத்திகை நடவடிக்கையில் ஈடுபட்டு பார்த்ததும் தெரிய வந்துள்ளது. மங்களபுரத்தில் உள்ள மாங்காட்டு பாலத்தின் மீது வெடிகுண்டு வீசி பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

நாட்டின் பொருளாதாரம் மீண்டுவிட்டதாகக் கூறினாலும், உங்கள் பர்ஸில் பணம் இருக்கிறதா? சாதாரண மக்களைத் தாக்கப்போகும் அடுத்த பேரிடி! உலக வங்கியின் பகீர் எச்சரிக்கை!

இலங்கையின் பொருளாதாரம் மீண்டாலும் மக்களின் வாழ்க்கையில் மாற்றமில்லை! உணவுப் பொருட்களின் விலையேற்றம்...

லலித் – குகன் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு! நீதிமன்றில் முன்னிலையான கோட்டாபய ராஜபக்ச!

காணாமல் ஆக்கப்பட்ட அரசியல் செயற்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன்...

நாமலின் ஏர்பஸ் இலஞ்ச வழக்கு! சாட்சியமளிக்க இலங்கை வரும் பிரான்ஸ் புலனாய்வாளர்!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான ஏர்பஸ் இலஞ்சக் குற்றச்சாட்டு தொடர்பான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்