வடக்கிலிருந்து எடுத்து செல்லப்பட்ட காணி ஆவணங்களை மீள கொண்டு வாருங்கள்: மஹிந்தானந்த உத்தரவு!

Date:

யாழ்ப்பாணத்தில் இருந்து அநுராதபுரத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட காணி ஆவணங்கள் அனைத்தையும் யாழிற்கு மீண்டும் கொண்டு வர வேண்டுமென கமத்தொழில் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே உத்தரவிட்டார்.

இதையடுத்து,காணி ஆவணங்கள் அனைத்தும் யாழ்ப்பாணத்துக்கு உடனடியாக எடுத்து வர நடவடிக்கையெடுக்கப்படுகிறது.

கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான தேசிய நிகழ்ச்சி யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று (17) நடைபெற்றது.

இக்கலந்துரையாடலின் போது, காணி தொடர்பான கலந்துரையாடல் வரும் போது, யாழ்ப்பாணத்தில் இருந்து, ஏனைய இரு மாவட்டங்களுக்குமுரிய காணி ஆவணங்கள் அனைத்தும் கடந்த வாரம் இரவோடு இரவாக கொண்டு செல்லப்பட்டதாக, அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி, அநுராதபுரம் கொண்டு செல்லப்பட்ட அனைத்து காணி ஆவணங்களையும் யாழ்ப்பாணத்துக்கு கொண்டு வருமாறு உத்தரவிட்டதுடன், எவ்வாறு யாழ்ப்பாணத்து மக்கள் அநுராதபுரத்திற்குச் சென்று காணி ஆவணங்கள் தொடர்பாக தமது தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியுமென்றும் கேள்வி எழுப்பினார்.

சில அதிகாரிகளின் இவ்வாறான செயற்பாடுகள், மக்கள் மத்தியில் பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்துவதாக கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் புதிய அதிபராக அருட்தந்தை லெபோன் சுதன் கடமையேற்பு

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலையின் புதிய அதிபராக இலங்கை...

பஸ் லலித் விசாரணையில் கக்கியவை!

டுபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குற்றவாளி லலித் கண்ணங்காரவிடம் நடத்தப்பட்ட...

அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு விளக்கமறியல்

கைதான மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை நாளை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்