யாழில் கஞ்சா விநியோகிப்பவர் கைது!

Date:

யாழ்ப்பாணத்தில் கஞ்சா போதைப்பொருளை விநியோகித்து வரும் முச்சக்கர வண்டிச் சாரதி ஒருவர் மாவட்ட குற்றத்தடுப்புப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சுழிபுரத்தைச் சேர்ந்த 38 வயதுடைய முச்சக்கர வண்டிச் சாரதியே யாழ்ப்பாணம் நகரில் வைத்து நேற்றுக் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரிடமிருந்து 2 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது என்று யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் பல இடங்களுக்கும் கஞ்சா போதைப்பொருளை விநியோகிப்பதாக விசாரணையில் தெரியவந்தது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அவர் இன்று நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு விளக்கமறியல்

கைதான மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை நாளை...

வதந்திகளையும், பொய்களையும் மட்டும் பேசிய விஜய்!

“சட்டம் - ஒழுங்கு குறித்தும், குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்தும்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்