இன்றைய வானிலை!

Date:

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ, மத்திய, மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மழை நிலைமை : புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் சில இடங்களில் இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன், காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 10-30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

கடல் நிலை : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் சாதாரண அலையுடன் காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்

யாழ்ப்பாணம் – சிறிதளவில் மழை பெய்யும்.
மன்னார் – சீரான வானிலை.
திருகோணமலை -பிரதானமாக சீரான வானிலை.
மட்டக்களப்பு – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்.
கண்டி -பிரதானமாக சீரான வானிலை.
நுவரெலியா – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்.
இரத்தினபுரி – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்.
அனுராதபுரம் – சீரான வானிலை.
கொழும்பு – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்.
காலி – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்.

-வளிமண்டலவியல் திணைக்களம்-

spot_imgspot_img

More like this
Related

“இரண்டு ஆண்டு வலி…” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த டாக்ஸிக் உறவு அனுபவம்

“என் வாழ்வில் இரண்டு ஆண்டுகள் நார்சிஸ்டிக் (Narcissistic) கொடுமைகளால் பாதிக்கப்பட்டிருந்தேன்” என...

இரண்டாவது தேனிலவுக்காக தொழிலதிபரின் ஏரிஎம் அட்டை திருடிய யுவதி கைது!

தனது தேனிலவுக்கு செலவிடுவதற்காக ஒரு தொழிலதிபருக்குச் சொந்தமான ஏடிஎம் அட்டைகளைத் திருடியதாகக்...

மையவாடி பிரச்சினைக்கு மாளிகைக்காடு பள்ளிவாசல்கள் மற்றும் பொது அமைப்புகளின் சம்மேளனத்துடன் பிரதேச சபை கலந்துரையாட வேண்டும் – உப தவிசாளர் இஸ்மாயில்

மாளிகைக்காடு மக்களுக்கான நிரந்தரமான மாற்று மையவாடியை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை காரைதீவு பிரதேச...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்