நீரில் அடித்துச் செல்லப்பட்ட இராணுவ கப்டனின் சடலம் மீட்பு!

Date:

குருவிட்ட, வலந்துர கார்டியல்ல பகுதியில் குளித்துக்கொண்டிருந்த போது காணாமல் போன இராணுவ கப்டன் சுரன் ரணசிங்கவின் சடலம் நேற்று குருகங்கையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக குருவிட்ட பொலிஸார் தெரிவித்தனர்.

கப்டன் சூரன் ரணசிங்க குருவிட்ட கெமுனு வோச் படையணியில் கடமையாற்றும் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். இவர் மில்லவிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடந்த 5ஆம் திகதி மாலை கரடியல்ல பகுதியில் உள்ள நீர்நிலையொன்றில் நான்கு நண்பர்களுடன் நீராடச் சென்றுள்ளார்.

இருவர் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும், ஒருவர் மரக்கிளையை பிடித்து தப்பித்துக் கொண்டதாகவும், இராணுவ கப்டன் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதாகவும், நேற்று மாலை வரை அவரை கண்டுபிடிக்க முடியவில்லையென்றும்   பொலிஸார் தெரிவித்தனர்.

குருவிட்ட பொலிஸார், குருவிட்ட இராணுவ முகாம், கடற்படையினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து காணாமல் போன கப்டனின் சடலத்தை கண்டெடுத்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

விஜய் அரசின் குதிரை பேரம்: பிரேமலதா கிடுக்குப்பிடி

முகத்தை மூடிக்கொண்டு தனது வீட்டுக்கு வந்ததவர் யார்? என்பதை முதல்வர் விஜய்...

16 வயது சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து கடத்தல்: 21 வயது குடும்பஸ்தரும் நண்பரும் மடக்கிப் பிடிப்பு!

மட்டக்களப்பு நகரில் உறவினர் வீட்டுக்கு சென்ற 16 வயது சிறுமி ஒருவரை...

ரசிக வெறியால் வந்த வினை: தமிழக தேர்தலில் கள்ள வாக்கிட்ட இலங்கைத் தமிழர்கள் பலர் கைது!

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற்று முடிந்துள்​ளது. எப்​போதும் இல்​லாத வகை​யில் இந்​த​முறை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்