Pagetamil
உலகம்

பிரியந்தகுமாரவை காப்பாற்ற முயன்ற சக ஊழியருக்கு பாகிஸ்தானின் ‘துணிச்சல் மிக்க’ விருது!

பாகிஸ்தானின் சியால்கோட்டில் அடிப்படைவாத கும்பலின் கைகளில் சிக்கி உயிரிழந்த  இலங்கையர் பிரியந்தகுமாரவை காப்பாற்ற முயற்சித்த, சக ஊழியரான மாலிக் அட்னானுக்கு தம்கா-இ-ஷுஜாத் (துணிச்சலுக்கான விருது) வழங்கப்படும் என்று பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார்.

பிரியந்த குமார மத நிந்தனைக் குற்றச்சாட்டில், அடிப்படைவாதிகளால் கொடூரமாக கொல்லப்பட்டிருந்தார்.

தொழிற்சாலையின் மேற்கூரையில் சொலார் பனலுக்கிடையில் பிரியந்த ஒளிந்திருந்த போது, அவரை குமபல் சுற்றிவளைத்து தாக்கியது.

இதன்போது, அட்னானன் தலையிட்டு, கும்பலை சமரசப்படுத்த முயன்றார். கூரையில் விழுந்திருந்த பிரியந்தகுமாரவை தனது கால்களிற்கிடையில் வைத்துக் கொண்டு காப்பாற்ற முயன்றார்.

எனினும், அவரது முயற்சி வெற்றியளிக்கவில்லை.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட ருவிற்றர் பதிவில், “சியால்கோட்டில் ஆக்ரோசம் கொண்ட கும்பலிடம் இருந்து பிரியந்தவிற்கு அடைக்கலம் அளித்து காப்பாற்ற முயன்ற மாலிக் அட்னானின் தார்மீக தைரியம் மற்றும் துணிச்சலுக்கு தேசத்தின் சார்பாக நான் வணக்கம் செலுத்த விரும்புகிறேன்.”

அட்னான் தனது உயிரை பொருட்படுத்தாமல் பாதிக்கப்பட்டவரை உடல் ரீதியாக பாதுகாக்க முயற்சித்ததாக பிரதமர் குறிப்பிட்டார். அவருக்கு தம்கா-இ-ஷுஜாத் விருது வழங்கப்படும் என்று கூறினார்.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

ஹமாஸ்ஸினால் விடுவிக்கப்பட்ட 3 பணயக்கைதிகள் இஸ்ரேலில் இணைவு

east tamil

47வது அமெரிக்க ஜனாதிபதியாக பதியேற்கும் டொனால்ட் ட்ரம்ப்

east tamil

3 மணித்தியால இழுபறியின் பின் இஸ்ரேல்- ஹமாஸ் போர் நிறுத்தம் அமுலாகியது!

Pagetamil

2025ம் ஆண்டுக்கான ஒஸ்கர் விருது விழா ரத்தாகுமா?

east tamil

கவிழ்ந்த கொள்கலனில் பெற்றோல் எடுத்த 70 பேர் எரிந்து பலி

Pagetamil

Leave a Comment