மன்னார் விபத்தில் காயமடைந்தவர்களிற்கு குருதி வழங்க திரண்ட மக்கள்!

Date:

தலைமன்னார் பகுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (16) மதியம் இடம் பெற்ற புகையிரத விபத்து காரணமாக காயம் அடைந்து மன்னார் மாவட்ட பொது வைத்திய சிகிச்சை பெற்று வருகின்றவர்களுக்கு தேவையான குருதி தட்டுப்பாடு வைத்தியசாலையில் நிலவி வந்தது.

இந்த நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை நிர்வாகம் குருதி வழங்க மக்களிடம் கோரிக்கை விடுத்தது.

அதற்கு அமைவாக மன்னாரின் பல பகுதிகளில் இருந்து இளைஞர் யுவதிகள் உற்பட நூற்றுக்கணக்கானவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை மாலை மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு வருகை தந்து குருதி வழங்கியுள்ளனர்.

குறித்த விபத்தில் 25ற்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்த நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் யுவதிகள் இரத்தம் வழங்குவதற்கு தன்னார்வத்துடம் வருகை தந்து குருதி வழங்கியுள்ளனர்.

எனினும் வைத்திய சாலையின் இன்றைய அவசர கால நிலை காரணமாக குறிப்பிட்ட அளவு குருதியே பெற்றுக்கொள்ளப்பட்டு இரத்தம் சேகரிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும் இன்னும் இரத்த தேவை காணப்படுவதனால் நாளைய தினமும் மன்னார் பொது வைத்திய சாலையின் இரத்த வங்கியில் குருதி வழங்க முடியும் என தெரிவிக்கப்படுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மத்தியகுழு கூட்டத்தில் வெடித்த சுமந்திரன்- சிறிதரன் மோதல்

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் வழக்கம் போல பெரும்...

கள்ளக்காதலனுடன் இணைந்து தாயைக் கொன்ற மகள்

திரப்பனை நகர எல்லைக்குட்பட்ட அத்துங்கம சந்திப்புக்கு அருகே உள்ள ஒரு வீட்டில்...

சிறிதரன் விவகாரத்தை ஆராய 3 பேர் கொண்ட குழு

பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தொடர்பாக முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளை ஆராய்வதற்காக அவரது இணக்கப்பாட்டுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்