உருத்திரபுரம் சிவன் ஆலயத்தில் அடுத்த வாரம் அகழ்வாராய்ச்சி ஆரம்பம்!

Date:

கிளிநொச்சி உருத்திரபுரம் சிவனாலய வளாகத்தில் தொல்பொருள் ஆய்வுப்பணி மேற்கொள்வதற்காக முன்னாயத்தங்கள் இன்று (16) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 23 ஆம் திகதி அங்கு அகழ்வாராச்சி ஆரம்பிக்கப்படவுள்ளது.

உருத்திரபுரம் சிவன் ஆலய வளாகம் இன்று செவ்வாய்க்கிழமை தொல்பொருள் திணக்களத்தனரால் துப்பரவு செய்யப்பட்டுள்ளது.

பண்டைய சிவன் ஆலயம் இருந்த பகுதி மண்மேடாக காட்சியளிக்கும் நிலையில், அந்த இடத்திலேயே அகழ்வாராய்ச்சி இடம்பெறவுள்ளது. பற்றைகள் வளர்ந்திருந்த அந்த இடம் இன்று துப்பரவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆலயமும் பௌத்தர்களிற்கு சொந்தமானது என கூறி, பிக்குகள் சிலர் முன்னர் அங்கு வந்து சென்றிருந்தனர்.

குருத்தூர் மலை விவகாரத்தின் பின்னர் உருத்திரபுரம் சிவன் ஆலய பகுதிக்கு பௌத்த துறவி ஒருவரும், பொலிஸாரும் சென்று பார்வையிட்டிருந்தனர்.

இந்த நிலைல் அங்கு எதிர்வரும் 23ம் திகதி அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

spot_imgspot_img

More like this
Related

அர்ச்சுனாவுக்கு பிடியாணை

யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனைக் கைது செய்வதற்கான பிடியாணை...

உயர்தர அனுமதி அட்டை திருத்தம் ஆகஸ்ட் 3 வரை திறந்துள்ளது

உயர்தர அனுமதி அட்டை திருத்தம் ஆகஸ்ட் 3 வரை திறந்துள்ளது 2026 ஆம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்