27.3 C
Jaffna
February 1, 2025
Pagetamil
குற்றம்

சமூக ஊடகங்களில் உலாவிய போலி பொலிஸ்காரன் கைது!

சமூக ஊடகங்கள் மூலம் உப பொலிஸ் பரிசோதகராக நடித்து வந்த ஒருவர் நேற்று இரவு (15) பன்னிப்பிட்டி, பொல்வத்த பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெற்கு மாகாண தெற்கு குற்றப்பிரிவு அவரை கைது செய்தது.

சந்தேகநபர் இன்று (16) நுகேகொட நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவர் ரூ .200,000 பிணையில் விடுவிக்கப்பட்டார்.

பொலிஸ் சீருடையில் எடுத்த புகைப்படங்களை வட்ஸ்அப், எமோ, வைபர் மற்றும் முக புத்தகத்தில் பதிவிட்டு, தன்னை உப பொலிஸ் பரிசோதகராக குறிப்பிட்டு வந்துள்ளார்.

ரக்வாணை பகுதியை சேர்ந்த 35 வயதான நபர்,  கட்டிட கட்டுமானத் துறையில் ஒரு தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரிகிறார்.

பொலிஸ் பரிசோதகராக குறிப்பிட்டு ஏதேனும் குற்றத்தில் தொடர்புபட்டுள்ளாரா என்று கண்டுபிடிக்க சிறப்பு விசாரணை நடத்தி வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

மாதம்பையில் கத்திக்குத்து தாக்குதல் – ஆண் உயிரிழப்பு, பெண் படுகாயம்

east tamil

கடித்துக் குதறிய கணவன்; மனைவிக்கு உதட்டில் 16 தையல்கள்

east tamil

உடுவில் பிரதேசத்தில் 330 லீற்றர் கோடாவுடன் ஒருவர் கைது!

Pagetamil

கணவனின் கொடூரம்: மனைவியை கொன்று, சமைத்து, எலும்புகளை உரலில் இடித்த அதிர்ச்சி சம்பவம்!

east tamil

யாழ்ப்பாண கோழி பிடித்த 3 பேர் கைது!

Pagetamil

Leave a Comment