யாழ்ப்பாணம், அரியாலை பிரதேசத்தில் உயர்தர மாணவியொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.
இன்று (25) அதிகாலை 1 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.
வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை மாணவியான பிரேமச்சந்திரன் திசாரா (17) என்பவரே உயிரை மாய்த்துள்ளார்.
இன்றைய தினம் செயன்முறை பரீட்சை தொடர்பாக பாடசாலைக்கு வருமாறு ஆசிரியரால் அழைக்கப்பட்டிருந்தார். அதற்கான தயார்ப்படுத்தல்களையும் செய்துவிட்டு குடும்பத்தினர் மகிழ்ச்சியாக தொலைக்காட்சி பார்த்துவிட்டே இந்த தவறான முடிவை எடுத்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.



