சம்மாந்துறை பிரதேசத்திலுள்ள சீமெந்து வியாபாரிகளுடான கலந்துரையாடல்

Date:

சம்மாந்துறை பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள சீமெந்து தட்டுப்பாடு மற்றும் உத்தரவாத விலையை நிர்ணம் செய்தல் தொடர்பாக சீமெந்து வியாபாரிகளுடான கலந்துரையாடல் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எம்.முஹம்மட் நௌஷாட் தலைமையில் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றது.

இதன்போது சீமெந்து பக்கடில் பொறிக்கப்பட்ட விலையில் விற்பனை செய்வது தொடர்பாகவும், சீமெந்து தட்டுப்பாடு நிலவுவதற்கு காரணத்தையும் சீமெந்து வியாபாரிகளிடம் கேட்டறிந்து கொண்டதுடன் எதிர்காலத்தில் இவ்பிரச்சினையினை நிவர்த்தி செய்வதற்கான வழிமுறைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

சீமெந்து வியாபாரத்தில் பதுக்கல் மேற்கொள்ளாமல் பொதுமக்களுக்கும் பாதிப்பு அல்லாத வகையில் சீமெந்து வியாபாரிகள் மனசாட்சியுடன் சீமெந்து வியாபாரத்தை மேற்கொள்ளுமாறு தவிசாளர் சீமெந்து வியாபாரிகளிடம் கேட்டுக் கொண்டார்.

சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட், வருமானப் பரிசோதகர் ஏ.எம்.அமீன், பட்டதாரி பயிலுனர் எம்.ரீ.எம்.நப்ரீஸ், சீமெந்து வியாபாரிகள் உள்ளிட்டோர் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

40 ஆண்டுகளின் பின் ஈரானுக்குள் அமைதியாக நடக்கும் அதிகார மாற்றம்: மதகுருமாரை பின்தள்ளி ஆதிக்கம் செலுத்தும் இராணுவம்!

த நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையின் ஒரு விரிவான அறிக்கையின்படி, ஈரானின் முடிவெடுக்கும்...

அம்பியூலன்ஸ் மெதுவாக சென்றதால் பொலிஸ்காரர் உயிரிழப்பா?: பௌத்த பிக்கு குற்றச்சாட்டு

திருகோணமலை மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் இருந்து திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு ஏற்றிச்...

ஈரானுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்தமாட்டோம்: ட்ரம்ப்

ஈரானுக்கு எதிரான போரில் அணு ஆயுதத்தைப் பயன்படுத்த மாட்டேன் என்று அமெரிக்க...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்