ஐக்கிய நாடுகள் சபையின் மத்திய கிழக்கு, ஆசியா மற்றும் பசுபிக் நாடுகளுக்கான அரசியல் மற்றும் சமாதானத்தை கட்டியெழுப்பும் விவகாரங்கள் திணைக்களத்தின் உதவிப் பொதுச் செயலாளர் காலித் கியாரி தனது முதல் விஜயத்தை 2021 நவம்பர் 23 முதல் நவம்பர் 25 வரை இலங்கைக்கு மேற்கொள்ளவுள்ளார்.
அவர் இலங்கையின் முக்கிய அரசாங்க அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சிகள், சிவில் சமூகம், மதத் தலைவர்கள் மற்றும் இராஜதந்திர சமூகத்தின் பிரதிநிதிகளை சந்திப்பார்.
இந்த ஆண்டு செப்டம்பரில் ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சந்தித்ததைத் தொடர்ந்து, கியாரியின் இந்த விஜயம் அமைந்துள்ளது.
துனிசியாவை சேர்ந்த கலீத் கியாரி, மத்திய கிழக்கு, ஆசியா மற்றும் பசிபிக் பகுதிகளுக்கான அரசியல் மற்றும் சமாதான நடவடிக்கைகளுக்கான உதவிப் பொதுச் செயலாளராக மே 2019 இல் பதவியேற்றார்.
அதற்கு முன், கியாரி துனிசிய வெளியுறவு அமைச்சகத்தில் அமெரிக்கா, ஆசியா மற்றும் ஓசியானியாவின் பொது இயக்குநராக இருந்தார். அவர் இராஜதந்திரம் மற்றும் வெளியுறவு விவகாரங்களில் 35 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர்.




