ஹெல்மெட்டில் பந்து தாக்கிய மேற்கிந்தியத்தீவுகள் வீரர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்!

Date:

இலங்கையுடனான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்தபோது பந்து தாக்கியதில் காயமடைந்த மேற்கிந்தியத் தீவுகள் அறிமுக வீரர் ஜெரெமி சோலோஸனோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் காலியில் இன்று ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.

நாணயச்சுழற்சியில் வென்ற இலங்கை கப்டன் திமுத் கருணாரத்ன முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார்.

24வது ஓவரில் கருணாரத்ன பந்தை ‘லெக்’ திசை நோக்கி அடித்தார். அந்தப் பந்து, துடுப்பாட்ட வீரருக்கு அருகே களத்தடுப்பு செய்து கொண்டிருந்த அறிமுக வீரர் சோலோஸனோ ஹெல்மட் மீது வேகமாகத் தாக்கியது. இதனால், அவர் நிலைகுலைந்துப் போனார்.

இதையடுத்து, ஸ்ட்ரெச்சர் உதவியுடன் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

விஜய் அமைச்சரவையில் மோசடிப் பேர்வழி: எச்சரிக்கும் மைத்துனர்!

அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை முதல்வர் விஜய் கண்காணிக்குமாறு லஜக தலைவர் ஜோஸ்...

திமுக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் உதயநிதி ஸ்டாலின்

திமுகவின் சட்டப்பேரவைக் கட்சியின் தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்தெடுக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து திமுக தலைமை...

“தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது ஏற்புடையதல்ல” – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

‘தமிழ்நாட்டில் நீண்டகாலமாக அரசு நிகழ்ச்சிகளில், துவக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவில் தேசிய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்