பெண் பொலிஸ் அதிகாரிக்கு குவியும் பாராட்டுக்கள்!

Date:

சென்னை டி.பி.சத்திரம் கல்லறையில் மயங்கிக் கிடந்த நபரைப் பெண் காவல் ஆய்வாளர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் தொடர்மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கியவர்களை மாநகராட்சி ஊழியர்கள், தீயணைப்பு வீரர்கள், போலீசார் மற்றும் பேரிடர் மீட்புக்குக் குழுவினர் மீட்டு நிவாரண முகாம்களில் தங்கவைத்து வருகிறார்கள்.

இந்நிலையில், டி.பி.சத்திரம் கல்லறையில் மரம் விழுந்து விட்டதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் அங்கு சென்று பார்த்துள்ளனர்.

அப்போது உள்ளே பணிபுரியும் ஊழியர் மயக்க நிலையில் இருந்ததை கண்ட பெண் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி, அவரை தோளில் தூக்கிக்கொண்டு சென்று, முச்சக்கர வண்டியில் ஏற்றி, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

spot_imgspot_img

More like this
Related

முதல் முறையாக நாடொன்றின் மீது இனப்படுகொலை நடத்தியதாக தீர்ப்பு: சர்வதேச நீதிமன்றம் வழங்கியது!

மியான்மர் தனது ரோஹிங்கியா சிறுபான்மையினருக்கு எதிராக இனப்படுகொலை செய்துள்ளது என்று சர்வதேச...

நீதிமன்றில் சாட்சியமளிக்க சென்ற செயற்பாட்டாளர் மீது கொலைவெறித் தாக்குதல்: யாழில் பயங்கரம்!

யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் கொலை வழக்கொன்றில் சாட்சியமளிக்க சென்ற அரசியல் செயற்பாட்டாளரும்,...

16 வயதைத் திருமணத்திற்கான விருப்பத்தெரிவாக மாற்ற வேண்டும்; இலங்கை உலமா கட்சி கோரிக்கை!

நக்கிள்ஸ் சம்பவத்துடன் தொடர்புடைய 15 வயது சிறுமியின் நலன்புரி மற்றும் தொடர்ச்சியான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்