யாழ் பல்கலைகழக வெளிமாவட்ட மாணவர்களின் உணவு கொள்வனவிற் நிதியுதவி!

Date:

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கு உணவு கொள்வனவுக்கான ஒரு தொகை நிதி இன்று மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.

பல்கலைக்கழக பரீட்சைகளுக்காக வெளி மாவட்டங்களிலிருந்து வருகை தந்து விடுதிகளில் தங்கி இருந்து கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற மாணவர்களுக்கே குறித்த உதவி வழங்கப்பட்டுள்ளது.

அண்மையில் பெய்த அடை மழையினால் மாணவர்களுக்கான உணவுப்பொருட்களை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்ட இடர்பாட்டை தொடர்ந்து பல்கலைக்கழக கலைப்பீட மூன்றாம் வருட மாணவர்கள் கஜதீபனிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் லண்டன் கிளையினரின் நிதிப்பங்களிப்புடன் குறித்த உதவித் தொகை இன்று வழங்கப்பட்டது.

இந்த உதவித் தொகையினை வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன், சாவகச்சேரி நகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோர் ஆகியோர் மாணவர்களிடம் நேரடியாகச் சென்று வழங்கி வைத்தனர்.

spot_imgspot_img

More like this
Related

முதல் முறையாக நாடொன்றின் மீது இனப்படுகொலை நடத்தியதாக தீர்ப்பு: சர்வதேச நீதிமன்றம் வழங்கியது!

மியான்மர் தனது ரோஹிங்கியா சிறுபான்மையினருக்கு எதிராக இனப்படுகொலை செய்துள்ளது என்று சர்வதேச...

நீதிமன்றில் சாட்சியமளிக்க சென்ற செயற்பாட்டாளர் மீது கொலைவெறித் தாக்குதல்: யாழில் பயங்கரம்!

யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் கொலை வழக்கொன்றில் சாட்சியமளிக்க சென்ற அரசியல் செயற்பாட்டாளரும்,...

16 வயதைத் திருமணத்திற்கான விருப்பத்தெரிவாக மாற்ற வேண்டும்; இலங்கை உலமா கட்சி கோரிக்கை!

நக்கிள்ஸ் சம்பவத்துடன் தொடர்புடைய 15 வயது சிறுமியின் நலன்புரி மற்றும் தொடர்ச்சியான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்