24.5 C
Jaffna
January 24, 2025
Pagetamil
விளையாட்டு

இலங்கை, மேற்கிந்தியத் தீவுகளின் பரிதாபம்: அடுத்த உலகக்கோப்பையிலும் கத்துக்குட்டிகளுடன் தகுதிச்சுற்றில் ஆட வேண்டும்!

அவுஸ்திரேலியாவில் 2022ம் ஆண்டு நடக்கும் ரி20 உலகக் கோப்பைப் போட்டியி்ல் சூப்பர்-12 சுற்றில் நேரடியாக விளையாட ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் அணிகள் தகுதி பெற்றுள்ளன.

ஆனால், நடப்பு ரி20 சாம்பியனான மே.இ.தீவுகள் அணி, இலங்கை அணி ஆகியன அடுத்த ஆண்டு ரி20 உலகக் கோப்பைப் போட்டியில் தகுதித்சுற்றில் விளையாடித்தான் வர வேண்டும்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவரும் ரி20 உலகக் கோப்பைப் போட்டியில் சம்பியன் அணி மற்றும் 2வது இடம் பெறும் அணி, மற்றும் தரவரிசையில் 6 இடங்களில் இருக்கும் அணிகளை வைத்து அடுத்த ஆண்டு நடக்கும் ரி20 உலகக் கோப்பைக்கு தகுதியான அணிகள் முடிவு செய்யப்படும். அதாவது சூப்பர்-12 சுற்றில் நேரடியாக விளையாடும் அணிகள் முடிவு செய்யப்படும்.

அந்தவகையில் இங்கிலாந்து, பாகி்ஸ்தான், இந்தியா, நியூஸிலாந்து, தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலிய அணிகள் தரவரிசையில் 6 இடங்களில் இருப்பதால், அடுத்த ஆண்டு ரி20 உலகக் கோப்பைப் போட்டியில் சூப்பர்12 சுற்றில் நேரடியாக விளையாடத் தகுதி பெறும்.

ஆனால், அவுஸ்திரேலியாவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் மே.இ.தீவுகள் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, ரி20 தரவரிசையில் 10வது இடத்துக்குச் சரிந்தது. இலங்கை அணி 9வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

ஆனால், பங்களாதேஷ் அணி ரி20 உலகக் கோப்பைப் போட்டித் தொடரில் மோசமான தோல்விகளைச் சந்தித்தாலும், உலகக் கோப்பைத் தொடருக்கு முன், நியூஸிலாந்து, அவுஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான ரி20 தொடரை வென்றதால், தரவரிசையில் 8வது இடத்தில் இருக்கிறது.

ஆப்கானிஸ்தான் அணி தரவரிசையில் 7வது இடத்தில் இருப்பதால், இரு அணிகளும் சூப்பர்-12 சுற்றுக்கு நேரடியாகத் தகுதிபெற்றன.

ஆனால் நடப்பு சம்பியனான மே.இ.தீவுகள் அடுத்த ஆண்டு தகுதிச்சுற்றில் விளையாடித்தான் பிரதானச் சுற்றுக்கு வர வேண்டும். இந்த உலகக் கோப்பைப் போட்டியில் 5 போட்டிகளில் 4 ஆட்டங்களி்ல் தோல்வி அடைந்துள்ளது. அதிலும் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 55 ரன்களில் மே.இ.தீவுகள் சுருண்டு மோசமான தோல்வியைச் சந்தித்தது.

இலங்கை அணி, தனது லீக் ஆட்டங்களில் பங்களாதேஷையும், மே.இ.தீவுகள் அணியையும் வென்றது, ஆனால், இங்கிலாந்து,தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டங்களில் தோல்வியடைந்தது.

இந்த இரு அணிகளுடன் ஸ்கொட்லாந்து மற்றும் நமீபியாவும் தகுதிச்சுற்றில் ஆடும். இதுதவிர, இன்னும் 4 கத்துக்குட்டி அணிகளும் தெரிவாகும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

என் மகளுக்கு நிச்சயதார்த்தம் நடக்கவில்லை!

Pagetamil

`இளம் எம்.பி -யைக் கரம் பிடிக்கும் ரிங்கு சிங்’; யார் இந்த பிரியா சரோஜ்?

Pagetamil

‘உங்களை விட என் மகன் சிறந்த வீரர்’ – கபில் தேவுக்கு ‘பேப்பர் கட்டிங்’ அனுப்பிய யோக்ராஜ் சிங்

Pagetamil

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து நியூஸிலாந்தின் மார்டின் கப்தில் ஓய்வு!

Pagetamil

தீர்ந்தது 10 ஆண்டு தாகம்: அவுஸ்திரேலியா வசமானது போர்டர் – கவாஸ்கர் டிராபி!

Pagetamil

Leave a Comment