வவுனியா ஈயத் தொழிற்சாலை விபத்தில் தொழிலாளி பலி!

Date:

வவுனியா, ஓமந்தை பகுதியில் அமைந்துள்ள ஈயத்தொழிற்சாலையில் ஈயம் உருக்கும் ஆலையில் காணப்பட்ட உருக்கு கல் இடிந்து விழுந்ததில் தொழிலாளி ஒருவர் மரணமடைந்துள்ளதாக ஓமந்தைப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இன்று பிற்பகல் (07) இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, ஓமந்தை, அரச வீட்டுதிட்டத்தை அண்மித்து காணப்படும் ஈயத் தொழிற்சாலையில் ஈயத்தை உருக்குவதற்கு பயன்படுத்தப்படும் ஆலையின் உள்ளே காணப்பட்ட உருக்கு கற்களை மாற்றீடு செய்வதற்காக மூவர் இணைந்து அவற்றை அகற்றியுள்ளனர்.

இதன்போது குறித்த ஆலையில் இருந்த உருக்கு கல் உடைந்து விழுந்தமையால் அங்கு பாதுகாப்பற்ற முறையில் கடமையில் ஈடுபட்ட தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.

அவரது தலையில் கல் விழுந்தமையினாலேயே அவர் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவத்தில் மாத்தளை பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான வேலு உதயராஜ் (38) என்பவரே மரணமடைந்தவராவார்.

அவரது சடலம் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் ஓமந்தை பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

பொலிஸ் காவலில் உயிரிழந்த இளைஞன்: உறவினர்கள் குற்றச்சாட்டு!

போதைப்பொருள் தொடர்பான விசாரணை ஒன்றின் பேரில் கைது செய்யப்பட்ட 29 வயதுடைய...

விகாரமஹாதேவி பூங்காவிலிருந்து மூட்டை கட்டிய பிக்குகள்

ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி விகாரமஹாதேவி பூங்காவில் தேரர்களால் முன்னெடுக்கப்பட்டு...

இலங்கைக்கு அருகே கடலில் சிக்கித்தவித்த 40 ஈரான் மாலுமிகள் மீட்பு

இலங்கைக் கரையில் இருந்து சுமார் 24 கடல் மைல் தொலைவில் தவித்துக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்