தலதா மாளிக்கைக்கு மேலாக ட்ரோன் பறக்கவிட்டவர் கைது!

Date:

கண்டி ஸ்ரீ தலதா மாளிகை பிரதேசத்தில் ட்ரோன் கமெராவை பறக்கவிட்டு, வீடியோ காட்சிகளை எடுத்த சந்தேகத்தின் பேரில் பங்களாதேஷ் பிரஜை ஒருவர் இன்று (05) காலை தலதா மாளிகை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டியில் உள்ள தலதா மாளிகை வளாகம் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ளதுடன் ஜனாதிபதி மாளிகை அருகாமையில் அமைந்துள்ளது. இந்தப்பகுதியில் அனுமதியின்றி ட்ரோன் கமெராக்களை பயன்படுத்துவது முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், தான் நடத்தும் யூடியூப் சனலுக்கு உரிய காட்சிகளைப் பெறுவதற்தாக ட்ரோனை பறக்கவிட்டதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

கமரா மற்றும் சந்தேக நபரின் கடவுச்சீட்டு மற்றும் சந்தேக நபரிடம் இருந்த கையடக்கத் தொலைபேசி மற்றும் ட்ரோன் கமெரா என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கண்டி பிரதேசத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமில் ரத்நாயக்கவின் பணிப்புரையின் பேரில் சுற்றுலா பொலிஸ் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் இத்தமல்கொட தலைமையிலான குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

யாழ். விமான நிலைய ஓடுபாதையில் மின்விளக்குகள் கூட இல்லாதது அதிர்ச்சியளிக்கிறது

காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய அபிவிருத்திக்கு இந்திய...

6 பிரதிப்பொலிஸ்மா அதிபர்களுக்கு இடமாற்றம்

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்கு உட்பட்டு, ஆறு பிரதி பொலிஸ் மா...

கொள்ளுப்பிட்டியில் சடலம் மீட்பு

கொள்ளுப்பிட்டி, அல்பிரட் ஹவுஸ் அவென்யூ பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்