செட்டிகுளத்தில் 16 – 19 வயது மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி ஏற்றல்

Date:

செட்டிகுளம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பாடசாலைகளில் 16 -19 வயது மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் 16 -19 வயது பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசிகளை வழங்கி பாடசாலைகளை விரைவாக மீள ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்கமைவாக, செட்டிகுளம் வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள உயர்தரப் பாடசாலைகளில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை சுகாதாரப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் சூடுவெந்தபுலவு அல் – இக்பால் மகாவித்தியாலயத்தில் இன்று (27) 16 – 19 வயதிற்குட்பட்ட 83 மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன.

இதன்போது, பாடசாலை மாணவர்கள் ஆர்வத்துடன் கோவிட் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டமையை அவதானிக்க முடிந்தது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இன்று ஈரானை தாக்கவிருந்தபோதும் அயல் நாடுகளின் கோரிக்கையால் கைவிட்டுள்ளோம்: ட்ரம்ப்

சவூதி அரேபியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின்...

அம்பாறையில் ஒருவர் சுட்டுப்பிடிப்பு

காவல்துறை காவலில் இருந்து தப்பிச் சென்ற சந்தேக நபர் ஒருவர், நேற்று...

டித்வா அனர்த்தத்தில் மண்ணுக்குள் புதைந்த முச்சக்கர வண்டி 171 நாட்களின் பின் மீட்பு

டித்வா புயலால் உவபரநாகமவில் உள்ள மஸ்பன்ன என்ற சிறிய ஊருக்கு அருகே...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்