வீட்டுக்கு டிமிக்கி விட்டு காதலனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற யுவதியை நடுவீதியில் இறக்கி அறைந்த அண்ணன்: யாழில் சம்பவம்!

Date:

நண்பியுடன் வீட்டிலிருந்து புறப்பட்டு, வழியில் காதலனின் மோட்டார் சைக்கிளில் ஏறிச் சென்ற யுவதியை, நடுவீதியில் வழிமறித்து, கன்னத்தில் அறைந்தார் சகோதரன்.

இந்த சம்பவம் யாழ்ப்பாணம், கொக்குவிலிற்கு அண்மையாக நேற்று முன்தினம் காலையில் நடந்தது.

காலை 6.30 அளவில் சம்பவம் நடந்தது. உயர்கல்விக்காக இரண்டு யுவதிகள் ஸ்கூட்டி ரக மோட்டார் சைக்கிளில், யாழ் நகர் பக்கமாக சென்று கொண்டிருந்தனர். கொக்குவிலிற்கு அண்மையாக அவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்த, அந்த யுவதிகளில் ஒருவரின் காதலனான சக மாணவன் அங்கு வந்து, காதலியை ஏற்றிக் கொண்டு சென்றார்.

அவர்கள் சிறிது தூரம் சென்ற நிலையில், மோட்டார் சைக்கிளில் வந்து அவர்களை குறுக்கறுத்து நிறுத்திய இளைஞன் ஒருவர், சடாரென கீழே இறங்கி யுவதியின் கன்னத்தில் சில முறை அறைந்தார்.

அங்கு வந்த ஓரிருவர் தலையிட்ட பின்னர்தான் அது குடும்ப விவகாரம் என்பது தெரிய வந்தது.

குடும்பத்தினரின் கண்டிப்பை மீறி, காதலனுடன் தொடர்பு கொள்வதை அறிந்த சகோதரன், நேரில் வந்து கையும் மெய்யுமாக பிடித்து, சகோதரியை அறைந்தது தெரிய வந்தது.

பின்னர், சகோதரியை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு சென்றார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

யாழில் இருந்து தமிழகம் சென்றபோது நடுக்கடலில் பழுதான கப்பல்: 7 மணி நேரமாக 144 பயணிகள் தவிப்பு

காங்கேசன்துறை- தமிழகத்தின் நாகப்பட்டினம் இடையே இயக்​கப்​படும் கப்​பலின் இயந்திரம் பழு​தான​தால் நடுக்​கடலில்...

தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் நாளை பதவியேற்பு!

ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை எண்ணிக்கையுடன் ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை, தவெக...

யாழ் போதனா வைத்தியசாலை தீ விபத்து; பெருமளவு மருந்துகள் அழிவு… மின் ஒழுக்கு காரணம்?: யாழில் தீயணைப்பு வசதி இல்லாததை வெளிச்சமிட்ட சம்பவம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருந்துக் களஞ்சியத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் ஏற்பட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்