ஆசிரம மேலாளர் கொலை வழக்கில் குர்மீத் ராம் ரஹீமுக்கு ஆயுள் தண்டனை

Date:

ஹரியாணாவை தலைமையிடமாகக் கொண்ட தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் ஏற்கெனவே ஆசிரமத்தில் 2 பெண் சீடர்களை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.

இதற்கிடையே, கடந்த 2002-ம் ஆண்டு தேரா சச்சா சவுதா அமைப்பில் ஆசிரம மேலாளர் ரஞ்சித் சிங் சுட்டுக்கொல்லப்பட்டார். பெண் சீடர்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக மேலாளர் ரஞ்சித் சிங், வெளியில் பரப்பியதாக குர்மீத் ராம் ரஹீம் சந்தேகித்துள்ளார். அதனால் ரஞ்சித்தை சிங்கை கொலை செய்துள்ளார் என்று சிபிஐ குற்றம் சாட்டியது.

இவ்வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம் குர்மீத் ராம் ரஹீம் மற்றும் அவரது கூட்டாளிகள் கிருஷ்னண் லால், ஜஸ்பிர் சிங், அவ்தார் சிங், சப்தில் ஆகிய 5 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து சிபிஐ நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

மேலும் குர்மீத் ராம் ரஹிம் சிங்கிற்கு 31 லட்சமும், சப்திலுக்கு 1.5 லட்சமும், ஜஸ்பிர் சிங் மற்றும் கிருஷ்ணனுக்கு தலா 1.25 லட்சமும், அவ்தார் சிங்கிற்கு 75 ஆயிரமும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராத தொகையில் 50 சதவீதம் கொல்லப்பட்ட ரஞ்சித் சிங்கின் குடும்பத்திற்கு வழங்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

இங்கினியாகலையில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் மூவர் கைது : அம்பாறை பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பில் பிரதான விநியோகஸ்தரும் சிக்கினார்

அம்பாறை மாவட்டத்தில் போதைப்பொருள் வர்த்தகத்தை ஒழிக்கும் நோக்கில் அம்பாறை பிரதி பொலிஸ்மா...

நிந்தவூரில் வாழ்வாதார மேம்பாட்டு தேவையுடைய குடும்பங்களுக்கு தையல் மெஷின் வழங்கும் நிகழ்வு

நிந்தவூரில் இயங்கிவரும் Best of Young சமூக சேவைகள் அமைப்பின் ஏற்பாட்டில்,...

கனடா கனவுடன் சென்றவர்கள் எதியோப்பாவில் கடத்தல்: கிளிநொச்சி தரகர் கைது!

கனடாவில் வேலை வாங்கித் தருவதாக ஆசை காட்டி மூன்று இலங்கையர்களைக் கடத்திய,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்