வெள்ளைப்பூண்டு மோசடியில் மேலும் 4 பேர் கைது!

Date:

வௌ்ளைப்பூண்டு மோசடி தொடர்பில் மேலும் 4 சதொச அதிகாரிகளை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர்.

கொள்வனவு தொடர்பான உதவி மேலாளர், சிரேஷ்ட விநியோக முகாமையாளர், விநியோக முகாமையாளர் மற்றும் வெலிசர மொத்த விற்பனை முகாமையாளர் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தின் பணிப்பாளரின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் தொடர்பாக வாக்குமூலங்களை வழங்குவதற்காக சந்தேகநபர்கள் இன்று வந்திருந்த போது இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நாளைய தினம் (12) வெலிசர நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

கன்னியா பகுதியில் விகாரை அமைக்க திட்டம்; தமிழ் மக்களின் உணர்வுகளை அரசாங்கம் மதிக்க வேண்டு

திருகோணமலை மாவட்டத்தில் வரலாற்று, மத மற்றும் பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த கன்னியா...

நாடாளுமன்றத்தில் எனது இறுதிநாட்கள் இவை: ஊசி அர்ச்சுனா!

தனது அரசியல் எதிர்காலம் குறித்துப் பேசிய யாழ் மாவட்ட சுயேச்சை நாடாளுமன்ற...

ஹோமாகம தலைக்கவச தொழிற்சாலையில் தீ: 5 பேர் பலி

இன்று காலை (21), ஹோமாகம தொழிற்பேட்டையில் உள்ள தலைக்கவசத் தொழிற்சாலை ஒன்றில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்