26.1 C
Jaffna
March 1, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள்

ராஜபக்சக்களின் கையாள் மணி; குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கிறோம்: முன்னணி!

ஈ.பி.டி.பியின் பி ரீமாக இருக்கும் மணிவண்ணனின் குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கிறோம் என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் க.சுகாஷ்.

இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மணிவண்ணன் தான் என்ன பேசுகின்றேன் என்பதை அறியாமல் அல்லது அறிந்தும் அறியாமல் பல குற்றச்சாட்டுகளை சுமத்திக் கொண்டிருக்கிறார். தமிழ் தேசிய மக்கள் முன்னணி கடந்த காலத்தில் ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டு வருவதற்காகத் தான் ஜனாதிபதித் தேர்தலை பகிஷ்கரித்ததாக ஒரு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். அவர் விடயம் தெரியாமல்தான் கதைக்கிறாரா அல்லது தெரிந்தும் தெரியாமல் கதைக்கிறாரா அல்லது உளறுகிறாரா என்பது தெரியவில்லை.

(மணிவண்ணன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இருந்த போது வழங்கிய நேர்காணல் ஒன்றின் பகுதியை தனது கையடக்க தொலைபேசியில் ஒளிபரப்பினார் சுகாஷ். அதில் தேர்தலை அனைத்து தமிழ் கட்சிகளும் புறக்கணிக்க வேண்டும் என்றும், தமிழ் தேசிய மக்கள் முன்னணி கொள்கையடிப்படையிலேயே தேர்தலை புறக்கணிப்பதாகவும் கூறுகிறார்)

தான் சார்ந்திருந்த கருத்தையே மாற்றி மக்களை மடையர்களாக்க நினைப்பது அருவருக்கத்தக்க விடயம்.

ஈ.பி.டி.பியுடன் சேர்ந்து ஆட்சியமைத்து விட்டு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி ராஜபக்சக்களின் அடிவருடிகள் என்பது உண்மையிலேயே அரசியல் அரிச்சுவடி தெரியாதவர்களின் கருத்து போலத்தான் உள்ளது.

ஈ.பி.டி.பி என்பது மத்திய அரசின் பங்காளி கட்சி. கோத்தபாய ராஜபக்சவின் அரசில் உள்ள சிறிலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினரும் மணிவண்ணனை ஆதரித்துள்ளார். மணிவண்ணனை ராஜபக்சக்கள் மேயராக்கினார்களே தவிர, தமிழ் தேசிய மக்கள் முன்னணி ராஜபக்ச தரப்பின் நிகழ்ச்சி நிரலில் இயங்கும் கட்சியல்ல. வரவு செலவு திட்டத்தை எதிர்த்து வாக்களித்த ஒரேயொரு தரப்பு நாங்கள்தான்.

நாங்கள் ஈ.பி.டிபிக்கு வாக்களித்தால் பிழையே தவிர, ஈ.பி.டி.பி எமக்கு வாக்களித்தால் பிழையில்லையென கூறிய மணிவண்ணன் தரப்பு, மாநகரசபையில் நிதிக்குழு உள்ளிட்ட குழுக்களிற்கு ஈ.பி.டி.பி உறுப்பினர்களை பிரேரிக்கிறார்கள்.

ஈ.பி.டி.பியின் பி ரீமாகவும், ராஜபக்ச தரப்பின் இடது, வலது கைகளாக இருக்கும் இவர்கள், தூய்மையான எமது கட்சியை விமர்சிப்பதற்கு தகுதியில்லை.

ராஜபக்ச தரப்பின் கையாட்களாக இருந்து முதல்வர் பதவியை பிடித்த மணிவண்ணனின் குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கிறேன்.

பகிஸ்கரிப்பை கொச்சைப்படுத்துவது விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதாகும் என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

டிரம்ப்- ஜெலன்ஸ்கி சந்திப்பு மோதலாகியது: வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற்றப்பட்ட உக்ரைன் தலைவர்!

Pagetamil

நீண்ட வரிசைகள்: எரிபொருள் தட்டுப்பாடு இல்லையென்கிறது பெற்றோலிய கூட்டுத்தாபனம்!

Pagetamil

சங்கு கூட்டணியில் இணையாமலிருக்க தமிழ் மக்கள் கூட்டணி, ஐங்கரநேசன் தரப்பு தீர்மானம்: பணம் வழங்குபவர்களின் அழுத்தத்தால் முடிவு?

Pagetamil

‘வடக்கு கிழக்கு மக்களின் ஆணையுடன் உருவான அரசாங்கம் இது’: ஐ.நாவில் சொன்னது அரசாங்கம்!

Pagetamil

உக்ரைன் போரில் ஐரோப்பிய நாடுகளின் ஈடுபாட்டால் 3ஆம் உலகப்போர் வெடிக்கலாம்: டிரம்ப் எச்சரிக்கை!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!