முல்லைத்தீவில் கற்றல் உபகரணங்கள் வழங்கல்!

Date:

முல்லைத்தீவு மாவட்ட மாங்குளம் பகுதியில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதோடு எதிர்கால இலக்குகளுக்கான தயார்படுத்தல் எனும் தொனிப்பொருளிலான கருத்தமர்வும் இன்று காலை மாங்குளம் பொதுநோக்கு மண்டபத்தில் இடம்பெற்றது.

ஒட்டிசுட்டான் பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் ராணி அறக்கட்டளையின் நிதி அனுசரணையில் பிரதேச இளைஞர் சம்மேளன தலைவி தனுஷியாவின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் 26 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் சாவகச்சேரி நகராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோர், ஒன்று கூடுவோம் இலங்கை அமைப்பின் அமைப்பின் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் சு.நக்கீரன், கிளிநொச்சி மாவட்ட சம்மேளன தலைவர் அஜந்தன், ஒட்டுசுட்டான் பிரதேச இளைஞர் சேவை அதிகாரி இரதீசன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கான செயலமர்வை முன்னெடுத்தனர்.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பில் ஏட்டிக்குப்போட்டியாக திலீபன் நினைவு நிகழ்வு

தியாகதீபம் திலீபன் அவர்களின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல் மட்டக்களப்பு காந்தி பூங்காவில்...

மயக்க மருந்து கொடுத்து சிறுமியை சீரழித்த பேருந்து நடத்துனர்!

தனியார் பேருந்து நடத்துநர் ஒருவர், டியூஷன் வகுப்பிற்குச் சென்று கொண்டிருந்த 15...

உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் பிரதேச சபையின் முயற்சி

நிந்தவூர் – 09 பகுதியில் அமைந்துள்ள வவ்வாளோடை களப்பை நீர்வாழ் உயிரின...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்